close
Choose your channels

மீண்டும் 100வது படத்தில் தளபதி விஜய்

Tuesday, January 30, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த தீபாவளி அன்று வெளியான தளபதி விஜய்யின் 'மெர்சல்' திரைப்படம் தமிழ்த்திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது படம் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு பேர் சொல்லும் படமாக அமைந்தது.

இந்த நிலையில் கோலிவுட் திரையுலகில் பல வெற்றி படங்களை தயாரித்து குறிப்பாக புதுமுக இயக்குனர்கள் பலரை அறிமுகம் செய்த நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் அடுத்த படம் 100வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனத்தின் 100வது படத்திலும் விஜய் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக நடிகர் ஜீவா சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

எனவே விஜய் நடிக்கும் அடுத்த படத்தை சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த நிறுவனம் தயாரித்த பூவே உனக்காக', 'லவ் டூடே', 'துள்ளாத மனமும் துள்ளும்', 'திருப்பாச்சி', 'ஜில்லா' போன்ற படங்களில் விஜய் நடித்துள்ளார் என்பதும் இந்த படங்கள் அனைத்துமே நல்ல ஹிட்டானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment