ஷாருக்கான் கேரக்டரில் நடிக்க விரும்பும் தளபதி விஜய்!

  • IndiaGlitz, [Tuesday,April 21 2020]

தளபதி விஜய் தான் நடித்து வரும் பெரும்பாலான படங்களில் நெகட்டிவ் கேரக்டர்களை தவிர்த்துவிடுவார் என்பதும், அவர் மாஸ் ஹீரோ கேரக்டர்களையே விரும்பி நடிப்பார் என்பதும் தெரிந்ததே. அழகியதமிழ் மகன், பிரியமுடன் போன்ற நெகட்டிவ் கேரக்டர்களில் நடித்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாததும் ஒரு காரணமாக இருக்கலாம்.

இந்த நிலையில் இதுகுறித்த அளித்த பேட்டி ஒன்றில், நான் நெகட்டிவ் கேரக்டருக்கு எதிரி கிடையாது. ஆனால் அந்த கேரக்டர்களில் நடிப்பதில் எனக்கு சில அசெளகரியங்கள் உள்ளன. எனது ரசிகர்கள் நான் மாஸ் ஹீரோ கேரக்டரில் நடிப்பதையே விரும்பி பார்க்கின்றனர். எனவே இதில் இருந்து வெளியே வர விரும்பவில்லை.

இருப்பினும் ஷாருக்கான நடித்த Baazigar அல்லது Darr படங்களின் கேரக்டர் போல் ஒரு கதை அமைந்தால் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க தயாராக உள்ளேன் என்று விஜய் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் தனது படங்களில் வரும் பஞ்ச் டயலாக்குகள் எனக்காக எழுதப்பட்டவை அல்ல என்றும் அது இயற்கையாகவே அமைகின்றது என்றும் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ளார்.

More News

ரேபிட் கிட்களை பயன்படுத்த வேண்டாம்: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அதிரடி அறிவிப்பு

கொரோனா வைரஸ் பரிசோதனை செய்வதற்காக ரேபிட் கிட் கருவிகளை சீனாவிலிருந்தும் தென்கொரியாவில் இருந்தும் தமிழகம் உட்பட இந்தியாவின் பல மாநிலங்களும்,

ஊரடங்கு நேரத்தில் மகளுடன் பைக் ரைடிங் செய்த 'தல'

கிரிக்கெட் ரசிகர்களால் அன்புடன் 'தல' என்று அழைக்கப்படும் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனி

பெருந்தொற்றில் இருந்து தடுப்பூசி மனித உயிர்களை எவ்வாறு காப்பாற்றுகிறது???  

கொரோனா பரவல் உலகம் முழுக்க ஒரு பெரிய பிரளயத்தையே ஏற்படுத்தியிருக்கிறது எனலாம்.

ஒரே சேனலில் பணிபுரியும் 26 பேர்களுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் தற்போது பத்திரிகையாளர்களையும் கொரோனா வைரஸ் தாக்க தொடங்கிவிட்டது.

இணையத்தில் வைரலாகும் ஜாக்குலின் ஜாலி வீடியோ

ஊரடங்கு உத்தரவு காரணமாக சினிமா படப்பிடிப்பு மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதை அடுத்து சினிமா நட்சத்திரங்கள் மற்றும் தொலைக்காட்சி நட்சத்திரங்கள் தற்போது