'அந்த மனசு தான் சார் கடவுள்.. விஜய்யின் நெகிழ்ச்சியான புகைப்படத்தை கொண்டாடும் ரசிகர்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய்யின் இன்றைய புகைப்படம் ஒன்றை அவரது மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ’அந்த மனசு தான் சார் கடவுள்’ என கமெண்ட்ஸை பதிவு செய்து வருகின்றனர்.
விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் இன்று சென்னையில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் நடைபெற்றது என்பதும் இந்த கூட்டத்தில் விஜய் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு சில ஆலோசனை கூறியதாகவும் கூறப்படுகிறது.
இதனை அடுத்து கூட்டம் முடிந்த பிறகு ரசிகர்களுக்கு பிரியாணி பரிமாறப்பட்டது என்றும், விஜய்யே பிரியாணியை ருசித்து பார்த்து ரசிகர்களுக்கு பிரியாணி பரிமாறி உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் விஜய்யுடன் பல ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்ட எடுத்துக் கொண்ட நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.
இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு மாற்றுத்திறனாளி ஒருவர் விஜய்யை சந்திக்க நீண்ட நேரம் காத்திருந்தை அறிந்து அவரை தூக்கி தனது கைகளில் ஏந்தியபடி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.
இந்த புகைப்படம் காட்டு தீயாக சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில் அந்த மனசு தான் கடவுள் என ரசிகர்கள் இந்த புகைப்படத்தை கொண்டாடி வருகின்றனர். மேலும் விஜய்க்கு ரசிகனாக இருப்பதே எங்களுக்கு பெருமை என்றும் இதனால் தான் விஜய்க்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றும் கமெண்ட்ஸ் பதிவாகி வருகின்றன.
இந்த நிலையில் விஜய் நடித்த ’வாரிசு’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது. இந்த படம் வெளியானதும் ’தளபதி 67’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Thalapathy @actorvijay Sir At His Fans Photoshoot Session Earlier Today.@TVMIoffl @Jagadishbliss @RIAZtheboss #Vairsu pic.twitter.com/fulySQ0hvM
— Bussy Anand (@BussyAnand) December 13, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments