விஜய்யின் கடைசி படத்தின் சம்பளம் இத்தனை கோடியா? ஆச்சரியத்தில் இந்திய திரையுலகம்..!

  • IndiaGlitz, [Tuesday,March 19 2024]

தளபதி விஜய் நடிக்க இருக்கும் கடைசி திரைப்படமான ’தளபதி 69’ படத்திற்கு அவருக்கு பேசப்பட்டிருக்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி இருக்கும் நிலையில் இந்த தகவலை கேட்டு இந்திய திரை உலகினர் ஆச்சரியத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தளபதி விஜய் தற்போது ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் ‘கோட்’ படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்திற்கு அவருக்கு 200 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ள விஜய் ’தளபதி 69’ படம் தான் தனது கடைசி படம் என்றும் அதன் பிறகு முழு நேர அரசியலில் களமிறங்க உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இதனை அடுத்து இந்த படத்தை இயக்கும் இயக்குனர் தேர்வு தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தை ராஜமவுலி இயக்கத்தில் உருவான ’ஆர்.ஆர்.ஆர்’ உட்பட பல வெற்றி படங்களை தயாரித்த டிவிவி என்ற நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில் விஜய்யின் கடைசி படமான ‘தளபதி 69’ படத்திற்கு விஜய்க்கு வரி உடன் சேர்ந்து 250 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விஜய்யின் அரசியல் படம் என்பது மட்டுமின்றி அரசியலில் அவர் குதிப்பதற்கு முன் நடிக்கும் கடைசி படம் என்பதால் தான் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்றும் அதனால் தான் இவ்வளவு பெரிய சம்பளம் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது விஜய்க்கு வழங்கப்பட்டிருக்கும் சம்பளத்தை கேட்டு இந்திய திரை உலகினர்களே ஆச்சரியத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.