'வாரிசு' இசை வெளியீட்டு விழா: விஜய் கூறிய குட்டிக்கதை!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த ’வாரிசு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் பிரமாண்டமாக நடந்த நிலையில் இதில் விஜய் வழக்கம்போல் குட்டிக்கதை கூறினார். அந்த குட்டி கதை பின்வருமாறு: ஒரு குடும்பத்தில் அம்மா அப்பா அண்ணன் தங்கை ஆகியோர் இருந்தனர். அந்த குடும்பத்தில் அப்பா வேலைக்கு சென்றுவிட்டு வரும்போது இரண்டு சாக்லேட்டை வாங்கி இரண்டு குழந்தைகளுக்கும் கொடுப்பார்.
அந்த சாக்லேட்டை தங்கச்சி பாப்பா உடனே சாப்பிட்டு விடுவார். ஆனால் அண்ணனோ, அடுத்த நாள் பள்ளிக்கு அந்த சாக்லேட்டை கொண்டு போக வேண்டும் என்பதற்காக ஒரு இடத்தில் மறைத்து வைப்பார்.
ஆனால் அண்ணன் சென்றவுடன் தங்கச்சி பாப்பா அந்த சாக்லேட்டையும் எடுத்து சாப்பிட்டு விடுவார். தினமும் இது போல் நடந்து கொண்டிருந்தது. அப்போது ஒருநாள் தங்கச்சி பாப்பா தனது அண்ணனிடம், ‘இந்த அன்பு அன்பு என்று சொல்கிறார்களே, அன்பு என்றால் என்ன என்று கேட்டார். அதற்கு அந்த அண்ணன் ’நான் வைக்கும் சாக்லெட்டை தினமும் நீ சாப்பிட்டு கொண்டிருக்கிறாய். நீ சாப்பிட்டு கொண்டிருக்கிறாய் என்று தெரிந்தும் அதே இடத்தில் வைக்கின்றனே அதற்கு பெயர் தான் அன்பு’ என்று கூறினார்.
அதுபோன்ற அன்பை பற்றி தான் ’வாரிசு’ படம் என்றும் அன்பு என்பது ஒரு அளவில்லாத ஆயுதம் என்றும் அந்த அன்பை எல்லோரும் பின்பற்றுங்கள் என்றும் தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout