close
Choose your channels

'விஜய் 60' படம் குறித்த முக்கிய தகவல்

Saturday, May 28, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 60' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது. அதனையடுத்து இரண்டாவது கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் நேற்றுடன் சென்னை படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.
மேலும் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஜூன் 4ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து வருவதாகவும் அவற்றில் ஒன்றில் நெல்லைத்தமிழ் பேசி நடித்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ், ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி, சுதன்ஷி பாண்டே, ஜான்விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். விஜயா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தை 'அழகிய தமிழ்மகன்' பரதன் இயக்கி வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment