விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் தீபாவளி விருந்து

  • IndiaGlitz, [Saturday,September 17 2016]

இளையதளபதி விஜய் நடிப்பில் பரதன் இயக்கி வரும் 'பைரவா' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைய உள்ளது.
சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக இந்த படத்தின் டீசரை விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் 'பைரவா' படத்தின் டீசர் வெளியாகும் தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தின் டீசர் வரும் அக்டோபர் 30ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. அன்றைய தினம் தீபாவளி என்பதால் விஜய் ரசிகர்களுக்கு அன்று இரட்டை விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
மேலும் இந்த படத்தின் இசை வெளியீடு இவ்வருட இறுதியில் வெளியாகும் என்றும் படத்தை வரும் பொங்கல் தினத்தில் வெளியிடவும் படகுழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ், ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி, சுதன்ஷி பாண்டே, உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். விஜயா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக இந்த படத்தை தயாரித்து வருகிறது.

More News

ஜப்பானில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கிடைத்த தமிழ் வரவேற்பு

ஆஸ்கார் உள்ளிட்ட பல சர்வதேச விருதுகளை பெற்று பாரத நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ள பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கு சமீபத்தில் ஜப்பான் நாட்டின் யோகோபோடியா என்ற அமைப்பு வழங்கும் ஃபுகுவோகா விருது அறிவிக்கப்பட்டது.

திருமணம் குறித்து நடிகை சாட்னா டைடஸ் விளக்கம்

விஜய் ஆண்டனி நடித்த வெற்றி படமான 'பிச்சைக்காரன்' படத்தில் நாயகியாக நடித்த நடிகை சாட்னா டைடஸ் கடந்த வாரம் பிரபல விநியோகிஸ்தர் கார்த்திக்கை திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

'கொடி' இசை வெளியீடு எப்போது? தனுஷ் தகவல்

கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என பிசியாக இருக்கும் தனுஷ் 'பவர் பாண்டி' என்ற படத்தின் மூலம் இயக்குனர் ஆகியுள்ளார்.

விஜய் ஆண்டனியின் 'சைத்தான்' ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி-நேரம்

விஜய் ஆண்டனி நடித்த 'பிச்சைக்காரன்' சமீபத்தில் வெளியாகி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் அவருடைய அடுத்த படமான 'சைத்தான்' படத்திற்கு மூன்று மாநிலங்களிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சூர்யாவின் 36வது படம் குறித்த அதிகாரபூர்வ தகவல்

சூர்யா நடித்து வரும் 34வது படமான 'எஸ் 3' படப்பிடிப்பு நிறைவடையும் நிலையில் உள்ளது என்பதும், அவருடைய அடுத்த படமான 35வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார் என்பதும் இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்பதும் நாம் அறிந்ததே.