முதல்நாள் வசூலில் 'கபாலி', 'தெறி'யை அடுத்து சாதனை படைத்த 'பைரவா'

  • IndiaGlitz, [Friday,January 13 2017]

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது.
நேற்று முன் தினம் நள்ளிரவே சென்னை உள்பட தமிழகத்தின் பல நகரங்களில் காட்சிகள் ஆரம்பிக்கப்பட்டு நேற்று அதிகாலை காட்சியும், அதன் பின்னர் ரெகுலரான நான்கு காட்சிகளும் ஓடியுள்ளது.
இந்நிலையில் பைரவா' திரைப்படம் சென்னையில் ரூ.92 லட்சம் முதல் நாளில் வசூல் செய்துள்ளது. இந்த தொகை சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கபாலி' மற்றும் விஜய்யின் முந்தைய சூப்பர் ஹிட் படமான 'தெறி' படத்தின் வசூல்களை அடுத்த தொகை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொங்கல் விடுமுறை ஆரம்பித்துவிட்டதால் இன்று முதல் வரும் திங்கள் வரையிலான இந்த படத்தின் ஓப்பனிங் வசூல் புதிய சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

நயன்தாராவுடன் நடிப்பது உண்மையா? விஷால் விளக்கம்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது பெரிய நடிகர்களுடன் ஜோடியாக நடிப்பதை தவிர்த்துவிட்டு நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் களமிறங்கிய ஐடி ஊழியர்கள்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் கிட்டத்தட்ட  தமிழர்கள் அனைவருமே ஒன்று சேர்ந்துவிட்டனர்...

'கொலை விழுக போவுது'. ஜல்லிக்கட்டுக்காக பிரபல இயக்குனர் எழுதிய கவிதை

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் போராட்டத்தை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் ஆளும் அரசுகள் திணறி வருகின்றன.

ஜி.வி.பிரகாஷின் 'கொம்புவச்ச சிங்கமடா'. ஜல்லிகட்டு பாடல் வரிகள்

ஜல்லிக்கட்டு பிரச்சனை தற்போது உச்சத்தில் இருக்கும் நிலையில் ஜி.வி.பிரகாஷ் இசையில் அருண்காமராஜ்  எழுதிய பாடிய 'கொம்பு வச்ச சிங்கமடா' பாடல் சற்று முன் இணையதளங்களில் வெளிவந்துள்ளது. பாடலின் வரிகளை கேட்கும்போதே நரம்பு முறுக்கும் வகையில் உள்ள இந்த பாடலின் வரிகள் இதோ...

டெல்லியில் 'லண்டன் மேடம் டூசாட்ஸ்' அருங்காட்சியின் கிளை

இந்நிலையில் இந்த அருங்காட்சியகத்தின் கிளை வரும் ஜூன் மாதம் இந்திய தலைநகர் டெல்லியில் திறக்கப்பபடவுள்ளது. இந்த தகவலை மெர்லின் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் இயக்குனர் உறுதி செய்துள்ளார். இதுகுறித்து பேச்சுவார்த்தையை பிரதமர் மோடி கடந்த ஆண்டு பிரிட்டன் சென்றிருந்தபோது நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது...