இளையதளபதி 'பைரவா' படத்தின் போனஸ் பாடல் இதுதான்

  • IndiaGlitz, [Wednesday,January 11 2017]

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' திரைப்படம் நாளை முதல் உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தின் ஓப்பனிங் வசூல் புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் பாடலாசிரியர் விவேக் எழுதிய பாடல் ஒன்று போனஸ் ஆக இணைக்கப்பட்டுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த பாடலின் வரிகளை பாடலாசிரியர் விவேக் தற்போது தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இதோ அந்த பாடலின் வரிகள்;

கோலப் புள்ளியாய் நாங்கள்
அன்போ அழகுவரி தீட்டி முடிக்கும்
வானப்பட்சியாய் நாங்கள்
கிளையோ இலையசைத்து வாழ்த்தி அனுப்பும்
கதல் குடிலில் காற்றும் இணைந்திடும்
விண்மீன் இரங்கி வீட்டில் விளக்கிடும்
நாவில் படரும் வார்த்தை அணைந்திடும்
தூய திரவம் எங்கள் தலைதொட தூரம் தாண்டியும் தெளிக்கும்
நாளை சூரியன் எழுதும் கவிதையில் எங்கள் பெயர்களும் இருக்கும்

பூஜையில் பொழிய பொறுக்கிய பூக்கள்
ஓவியக் குழந்தை பதுக்கிய பொம்பை
ஏழையின் வயிற்றில் இறங்கிய உணவு
இவைபோல் சுமந்தோம் எங்களின் கனவு

கைகளைக் குவித்து கனவுகள் சேர்ப்போம்
சேமித்த துளியில் நிலவுகள் பார்ப்போம்

சந்தோஷ் நாராயணன் இசையில் விவேக் எழுதிய இந்த பாடல் மிகப்பெரிய ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


More News

'பைரவா' படத்தின் ரன்னிங் டைம் இதுதான்

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' படம் ஏற்கனவே 'யூ' சான்றிதழ் பெற்றுள்ள நிலையில் தற்போது வரிவிலக்கிற்காக விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது

உலகின் முதல் 'பைரவா' காட்சி எப்போது தெரியுமா?

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' திரைப்படம் பொங்கல் கொண்டாட்டத்திற்கு முன்பே விஜய் ரசிகர்களுக்காக திரையிடப்படுகின்றது...

திரையரங்கு உரிமையாளர்களால் நெருக்கடிக்கு ஆளான 'பைரவா'

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' திரைப்படம் தமிழகம் உள்பட உலகில் உள்ள அனைத்து பகுதிகளிலும் ஜனவரி 12 முதல் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

ஜெயம் ரவி-அரவிந்தசாமியின் 'போகன்' சென்சார் தகவல்கள்

இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூ' சான்றிதழ் அளித்துள்ளனர். இதனால் இந்த படம் தமிழக அரசின் வரிவிலக்கை பெறும் வாய்ப்பை பெற்றுள்ளது...

ஐஸ்வர்யாராய் தான் எனது முதல் சாய்ஸ். ஜெயலலிதா கூறியது ஏன்?

ஜெயலலிதா கேரக்டரில் நடிக்க ஐஸ்வர்யாராய் பொருத்தமாக இருப்பார் என்றே கருதப்படுகிறது. ஏற்கனவே மணிரத்னம் நடித்த 'இருவர்' படத்தில் ஐஸ்வர்யா நடித்த இரண்டு கேரக்டர்களில் ஒரு கேரக்டர் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தில் ஐஸ்வர்யாராய் நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...