இளையதளபதி 'பைரவா' படத்தின் போனஸ் பாடல் இதுதான்
Send us your feedback to audioarticles@vaarta.com
இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' திரைப்படம் நாளை முதல் உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தின் ஓப்பனிங் வசூல் புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தில் பாடலாசிரியர் விவேக் எழுதிய பாடல் ஒன்று போனஸ் ஆக இணைக்கப்பட்டுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த பாடலின் வரிகளை பாடலாசிரியர் விவேக் தற்போது தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இதோ அந்த பாடலின் வரிகள்;
கோலப் புள்ளியாய் நாங்கள்
அன்போ அழகுவரி தீட்டி முடிக்கும்
வானப்பட்சியாய் நாங்கள்
கிளையோ இலையசைத்து வாழ்த்தி அனுப்பும்
கதல் குடிலில் காற்றும் இணைந்திடும்
விண்மீன் இரங்கி வீட்டில் விளக்கிடும்
நாவில் படரும் வார்த்தை அணைந்திடும்
தூய திரவம் எங்கள் தலைதொட தூரம் தாண்டியும் தெளிக்கும்
நாளை சூரியன் எழுதும் கவிதையில் எங்கள் பெயர்களும் இருக்கும்
பூஜையில் பொழிய பொறுக்கிய பூக்கள்
ஓவியக் குழந்தை பதுக்கிய பொம்பை
ஏழையின் வயிற்றில் இறங்கிய உணவு
இவைபோல் சுமந்தோம் எங்களின் கனவு
கைகளைக் குவித்து கனவுகள் சேர்ப்போம்
சேமித்த துளியில் நிலவுகள் பார்ப்போம்
சந்தோஷ் நாராயணன் இசையில் விவேக் எழுதிய இந்த பாடல் மிகப்பெரிய ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com