'பைரவா' பாடல்கள் உரிமை யாருக்கு?

  • IndiaGlitz, [Wednesday,December 14 2016]

வர்தா புயல் பாதிப்புகளிலிருந்து சென்னையும் தமிழகத்தின் இதர பகுதிகளும் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு கொண்டிருக்கின்றன. அடுத்ததாக இளையதளபதி விஜய்யின் பைரவா' பாடல்கள் என்னும் புயல், தமிழ் சினிமா ரசிகர்கள்கின் உள்ளங்களைக் கொள்ளை கொள்வதற்கான நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

பரதன் இயக்கத்தில், விஜய்-கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக இணைந்து நடித்திருக்கும் பைரவா' படத்தின் பாடல்கள் வெளியீடு டிசம்பர் மாதம் நடைபெறும் என்று முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பாடல்கள் வெளியீட்டுத் தேதி இன்னும் அறிவிக்கப்படாததால் கோடிக் கணக்கான விஜய் ரசிகர்கள் ஏக்கத்தில் உள்ளனர்.
இந்நிலையில் லஹரி மியுசிக் (Lahari Music) என்ற நிறுவனம், பைரவா' படத்தின் பாடல்கள் வெளியீட்டு உரிமையை வாங்கியிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு பைரவா' ஆடியோ வெளியீட்டுத் தேதி இன்னும் இரண்டு நாட்களுக்குள் அறிவிக்கப்பட்டுவிடும் என்றும் தகவல் வந்துள்ளது.
சந்தோஷ் நாராயணன் இசையில் பைரவா' பாடல்கள் பட்டையைக் கிளப்ப இன்னும் சில நாட்களே உள்ளன என்ற தகவல் விஜய் ரசிகர்களையும் தமிழ் சினிமா இசை ஆர்வலர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.