ஒரே நேரத்தில் 2 மொழிகளில் ரீமேக் ஆகும் 'கத்தி'

  • IndiaGlitz, [Wednesday,September 16 2015]

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இளையதளபதி விஜய் இருவேடங்களில் நடித்த 'கத்தி' மாபெரும் சூப்பர் ஹிட் ஆகி, ரூ.100 கோடி கிளப்பில் சேர்ந்தது என்பதை அனைவரும் அறிவோம். இந்நிலையில் இந்த படம் தெலுங்கு மற்றும் இந்தியில் அந்தந்த மொழிகளின் சூப்பர் ஸ்டார்கள் நடிப்பில் ரீமேக் ஆகவுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த சில வருடங்களாக திரையுலகில் இருந்து விலகி, தீவிர அரசியலில் ஈடுபட்டு அந்த மெகா ஸ்டார் சிரஞ்சீவி, தனது 150வது படத்தை விரைவில் தொடங்கவுள்ளார். இந்த படத்திற்காக அவர் பல கதைகளை கேட்டு வந்த நிலையில் தற்போது 'கத்தி' படத்தின் ரீமேக்கில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை பூரி ஜெகந்நாத் இயக்குவார் என்றும் கூறப்படுகிறது.

அதே நேரத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும், அந்த படம் 'கத்தி' படத்தின் ரீமேக்காக இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 'கத்தி' படத்தில் அரசியல் நெடி அதிகம் என்பதால் சிரஞ்சீவி மற்றும் சல்மான்கான் ஆகியோர்களுக்கு இந்த படத்தின் கச்சிதமாக பொருந்தும் என கூறப்படுகிறது. விரைவில் இந்த படங்கள் குறித்து அதிகாரபூர்வமாக தகவல்கள் வெளிவரும் என கூறப்படுகிறது.

More News

'புலி' படத்தின் சென்சார் விபரங்கள்

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படம் இன்று தணிக்கை செய்யப்படும் என்பதை ஏற்கனவே பார்த்தோம். அனைவரும் எதிர்பார்த்தபடி...

'கத்தி', 'எந்திரன் 2' படங்களுடன் கனெக்ஷன் ஆன 'தாரை தப்பட்டை?

தேசியவிருது பெற்ற இயக்குனர் பாலாவின் இயக்கத்தின் உருவாகியுள்ள 'தாரை தப்பட்டை' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து...

அறிமுக தயாரிப்பாளருக்கு ரஜினி கொடுத்த அட்வைஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் கடந்த 24 ஆண்டுகளாக உதவியாளராக இருந்த ஜெயராமன், கோலிவுட்டில் 'ரஜினி ஜெயராமன்' என்றே அழைக்கப்படுகிறார்...

திரையரங்குக்குக் குழந்தைகளோடு வராதீர்கள். மிஷ்கின்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'சந்திரமுகி' உள்பட பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் பி.வாசு. இவருடைய மகன் சக்தி நடித்த தற்காப்பு...

சென்னை மருத்துவமனையில் நடிகர் நாசர்?

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் அக்டோபர் 18ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் விஷால் அணியின் சார்பில் நடிகர் சங்க தலைவர் ...