’கத்துக்குட்டி’ படத்துக்கு விஜய்யின் மறைமுக பங்களிப்பு

  • IndiaGlitz, [Saturday,October 10 2015]

இயக்குனர் இரா.சரவணன் முதல் படத்திலேயே பரவலான கவனத்தை ஈர்த்துவிட்டார். பல தடைகளுக்குப் பிறகு நேற்று வெளியாகியிருக்கும் இவரது 'கத்துக்குட்டி' ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றுவருகிறது.

காவிரி டெல்டா பகுதிகளில் வாழும் விவசாயிகளின் பிரச்சனைகள் மற்றும் மீத்தேன் எரிவாயுத் திட்டத்தால் டெல்டா பகுதிகளில் ஏற்பட இருக்கும் பாதிப்புகள் குறித்து விரிவாக விவரித்திருக்கிறது இந்தப் படத்தின் கதை. இப்படி ஒரு சீரியஸான கதையை தனது முதல் படமாக எடுக்கும் துணிச்சல் சரவணனுக்கு எப்படி வந்தது என்பதை நம்முடனான பிரத்யேகப் பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.

“இந்தக் கதைதான் எனது முதல் படம் என்பதைத் தீர்மானித்துவிட்டேன், கடந்த ஆண்டு வெளியான கத்தி' படத்தின் வெற்றி எனது கதை மீதான நம்பிக்கையை அதிகரித்தது. 'கத்தி' போன்ற விவசாயிகள் பிரச்சனைகளைப் பேசும் படத்தில் விஜய் போன்ற பெரிய நடிகர் நடித்தது மிகவும் பாராட்டத்தக்க விஷயம். அந்தப் படத்துக்குப் பின் டெல்டா பகுதிகளில் பெரிதும் விரும்பப்படும் நடிகராக உருவாகிவிட்டார் விஜய்.” என்றார்.

'கத்துக்குட்டி' படத்துக்கு மூத்த இயக்குனர் பாரதிராஜா, மதிமுக தலைவர் வைகோ ஆகியோர் நற்சான்றிதழ் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

More News

விஜய் பாணியில் உருவாகியுள்ளதா 'விஐபி 2' டைட்டில்?

லையில்லா பட்டதாரி படத்துக்குப் பிறகு இயக்குனர் வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'விஐபி 2' என்று கூறப்படும் திரைப்படத்தின் அதிகாரபூர்வமான...

பிரிட்டனில் 'புலி' செய்த புதிய சாதனை

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படம் கடந்த 1ஆம் தேதி ரிலீஸ் ஆகி, ஊடகங்கள் மற்றும் சமூக இணையதளங்களின் கலவையான...

நானும் ரெளடிதான்' டீசர் விமர்சனம்

தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்த 'நானும் ரெளடிதான்' படத்தின் டீசர் சற்று முன்னர் வெளியாகியுள்ளது....

அக்.17-ல் 'விஜய் 59' குறித்த முக்கிய அறிவிப்பு

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படம் கடந்த 1ஆம் தேதி ரிலீஸ் ஆகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில்...

கலைப்புலி எஸ்.தாணுவுக்கு விஷால் கண்டனம் தெரிவித்தது ஏன்?

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெற இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில், சரத்குமார் மற்றும் விஷால் அணியினர்...