தளபதியின் 'மெர்சல்' இசை வெளியீட்டு தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு

  • IndiaGlitz, [Friday,July 21 2017]

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் 'மெர்சல்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் இன்றைய ஆடிவெள்ளி விசேஷமாக இந்த படம் குறித்து ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் அறிவித்திருந்ததை காலையில் பார்த்தோம்
இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு தேதி வரும் ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி வெளியிடப்படும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டு விஜய்-ஏ.ஆர்.ரஹ்மான் இணைந்து பணியாற்றிய 'அழகிய தமிழ்மகன்' படத்தின் பாடல்கள் வெளியானதை அடுத்து, பத்து வருடங்கள் கழித்து மீண்டும் அதே கூட்டணியில் உருவான 'மெர்சல்' படத்தின் பாடல்கள் வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தி விஜய் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் ரசிகர்களுக்கு உண்மையிலேயே ஒரு இனிப்பான, ஆடிவெள்ளி செய்தி தான் என்பதில் சந்தேகமில்லை.

More News

கமல்ஹாசனை அடுத்து ஊழலை வெளிப்படுத்திய துணிச்சலான இயக்குனர்

உலகநாயகன் கமல்ஹாசன், தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் ஊழல் நடக்கின்றது என்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஆணித்தரமாக கூறினார்..

விஜய் ஆண்டனி-கிருத்திகா படத்தின் நாயகி இவர்தான்!

கோலிவுட் திரையுலகில் பிரபல இசையமைப்பாளராக அறிமுகமாகி அதன்பின்னர் ஹீரோவாக தொடர் வெற்றி படங்களை கொடுத்தவர் விஜய் ஆண்டனி. தற்போது முழுநேர ஹீரோவாக மாறிவிட்ட விஜய் ஆண்டனி, 'முப்பரிமாணம்', 'அண்ணாத்துரை', 'காளி' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

டிராபிக் ராமசாமி வாழ்க்கை வரலாறு படத்தில் தளபதி?

பிரபல சமூகசேவகர் டிராபிக் ராமசாமி அவர்களை தெரியாதவர்கள் இருக்க முடியாது. எந்த ஆட்சியாக இருந்தாலும் அந்த ஆட்சியில் நடைபெறும் அக்கிரமங்களுக்கு எதிராக சட்டரீதியாக குரல் கொடுப்பவர்

கமல் அறிவிப்பு எதிரொலி: காணாமல் போன அமைச்சர்களின் இமெயில்கள்

தமிழக அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை நடிகர் கமல்ஹாசன் முன்வைத்தபோது 'இவரெல்லாம் ஒரு ஆளா? என்று கேட்ட அமைச்சர்கள் இன்று அவருடைய ஒரே ஒரு அறிக்கைக்கு பயந்து தங்களுடைய இணையதள முகப்பு பக்கங்களில் இருந்த இ-மெயில் முகவாிகளை அழித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஓவியாவை ஓரம்கட்ட கபடி டீம் காரணமா? அதிர்ச்சி தகவல்

பிக்பாஸ் வீட்டிற்கு நேற்று 'தமிழ் தலைவாஸ்' கபடி அணியினர் வருகை தந்து கபடி விளையாடினர் என்பது தெரிந்ததே.