'கபாலி'யின் 'நெருப்புடா' பாடலுக்கு இளையதளபதியின் ரியாக்ஷன்

  • IndiaGlitz, [Tuesday,June 14 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தின் பாடல்கள் கடந்த ஞாயிறு அன்று வெளியாகி 'நெருப்புடா' உள்ளிட்ட அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகி பட்டிதொட்டியெங்கும் ஒலித்து வருகிறது.

இந்நிலையில் 'கபாலி' படத்தின் பாடல்கள் வெளியாகும் முன்பே இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 60' படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், விஜய்யை சந்தித்து பேசியதாகவும் அந்த நேரத்தில் 'கபாலி' பாடல் குறித்த பேச்சு வந்ததாகவும், உடனே சந்தோஷ் நாராயணன் தனது ஐபோனில் வைத்திருந்த 'நெருப்புடா' பாடலை பிரத்யேகமாக விஜய்க்காக போட்டுக்காட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

'நெருப்புடா' பாடலை கேட்டு ஆச்சரியம் அடைந்த விஜய், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனை பாராட்டியதோடு 'விஜய் 60' படத்திற்கும் இதுபோன்ற எனர்ஜியான பாடலை கம்போஸ் செய்யும்படி கேட்டுக்கொண்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. 'விஜய் 60' படத்திலும் இதுபோன்ற எனர்ஜியான பாடல் வருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

சீயான் விக்ரமின் 'இருமுகன்' டிரைலர் தேதி?

விக்ரம் நடிப்பில் 'அரிமாநம்பி' இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 'இருமுகன்'...

சூர்யாவின் 'S3' ஆடியோ ரிலீஸ் எப்போது?

சூர்யா, சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான '24' திரைப்படம் ரசிகர்களின் பேராதரவை பெற்றதை அடுத்து சூர்யாவின் அடுத்த படமான 'S3'...

பிகினிக்காக 10 கிலோ எடையை குறைத்த பிரபல நடிகை

தென்னிந்திய மொழிகளில் நடித்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவராகிய ராய்லட்சுமி பாலிவுட்டில் ஏற்கனவே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'அகிரா' படத்தில் அறிமுகமானபோதிலும்...

ரோமியோ ஜூலியட்' படத்துக்கு நேர் எதிரானது 'போகன்' : லக்ஷ்மண்

கடந்த ஆண்டு வெளிவந்த வெற்றிப்படமான 'ரோமியோ ஜூலியட்' படக்குழுவான ஜெயம் ரவி, ஹன்சிகா, இயக்குனர் லக்ஷ்மண் ஆகியோர் மீண்டும் இணைந்துள்ள படம் 'போகன்'...

10 படம் எடுக்கும் பட்ஜெட்டில் 'பாகுபலி 2' கிளைமாக்ஸ்

எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி' திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.600 கோடி வசூல் செய்தது. இன்னும் சீனா...