விஜய்யை சூப்பர் ஹீரோவாக்கிய அஜித் பட நடிகை!

  • IndiaGlitz, [Wednesday,September 01 2021]

தல அஜித் படத்தில் நடித்த பிரபல நடிகை ஒருவர் தளபதி விஜய்யை சூப்பர் ஹீரோ என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அஜித் நடித்த ’என்னை அறிந்தால்’ உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் பல மலையாள படங்களிலும் நடித்தவர் நடிகை பார்வதி நாயர், சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருப்பார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் நடிகை பார்வதி நாயரிடம் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அவர் விஜய் தான் சூப்பர் ஹீரோ என்று பதிலளித்துள்ளார். ரசிகர் ஒருவர் அவரிடம் ’நீங்கள் ஆபத்தில் இருந்தால் உங்களை உடனடியாக காப்பாற்ற எந்த ஹீரோவை சூப்பர் ஹீரோவாக தேர்ந்தெடுப்பீர்கள்’ என்ற கேள்விக்கு பதிலளித்த பார்வதி நாயர் ’நான் எப்பொழுதுமே விஜய் சாரை தான் தேர்ந்தெடுப்பேன். அவர்தான் என்னுடைய சரியான தேர்வு. அவர் தான் என்னை பொருத்தவரை சூப்பர் ஹீரோ’ என்று பதில் சொல்லியுள்ளார்.

நடிகை பார்வதி நாயரின் இந்த பதில் விஜய் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.