விஜய் உண்மையான ஹீரோ தான்: ஆதரவு தெரிவித்த பாஜக நடிகை
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய்யின் கார் வரி குறித்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளித்த போது நீதிபதி ’சினிமா ஹீரோக்கள் சினிமாவில் மட்டும் ஹீரோவாக இல்லாமல் நிஜ வாழ்விலும் ஹீரோவாக இருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தார். இந்த கருத்துக்கு பாஜக ஆதரவு நடிகை ஒருவர் விஜய் உண்மையிலேயே ஹீரோ தான் என்று பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விஜய் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு ஏற்கனவே அவர் எட்டு ஆண்டுகளுக்கு முன்பே வரிகட்டிவிட்ட நிலையில் நுழைவு வரியில் இருந்து விலக்கு வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் தீர்ப்பு நேற்று வெளியானது. இந்த தீர்ப்பின்போது விஜய்க்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி சினிமா ஹீரோக்கள் உண்மையாகவும் ஹீரோவாக இருக்க வேண்டும் என்றும் வரி கட்டுவது என்பது ஒவ்வொரு குடிமகனின் பங்களிப்பு என்றும் தெரிவித்திருந்தார்.
நீதிபதியின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் விஜய்க்கு எதிரான ஹேஷ்டேக்குக்களும் சமூக வலைதளங்களில் பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகையும் நடன இயக்குனரும், பிக் பாஸ் போட்டியாளர்க்ளில் ஒருவரும், பாஜக பிரபலமுமான காயத்ரி ரகுராம் விஜய்க்கு ஆதரவாக டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
விஜய் ஒரு உண்மையான ஹீரோவாகத்தான் பலரது வாழ்க்கையில் உள்ளார். பிரதமரின் கொரோனா நிவாரண நிதி மற்றும் முதலமைச்சர் நிவாரண நிதி என்று அவர் கொடுத்திருக்கிறார். பல மாணவர்களை படிக்க வைத்திருக்கிறார். எத்தனையோ ரசிகர்களின் குடும்பங்களுக்கு உதவி செய்திருக்கிறார். நீதிமன்றத்தில் நடந்தது நீதிமன்றத்தோடு முடிந்துவிட வேண்டும் அவர் செய்த உதவிகளை நாம் மறக்கக் கூடாது இந்த ஒரு விஷயத்திற்காக அவர் செய்த நல்ல விஷயங்களை மறக்க கூடாது என்று கூறியிருக்கிறார்.
Vijay has always been a real life hero to many poor people. He has donated for COVID PM care funds and CM care funds. He has helped many students for education. He Helps his fans (family). Media should not malign ones character. The matter was in court and ends in court.
— Gayathri Raguramm ?????? (@BJP_Gayathri_R) July 13, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments