close
Choose your channels

தளபதி விஜய் ரசிகர்களுக்கு ஒரு சிறிய ஏமாற்றம்

Wednesday, August 2, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் ஒரு சிறந்த நடிகர் மட்டுமின்றி ஒரு நல்ல பாடகர் என்பது அனைவரும் அறிந்ததே. கடந்த சில வருடங்களாகவே அவர் நடித்து வரும் படங்களில் ஒரு பாடலை பாடி வரும் வழக்கத்தை கொண்டுள்ளார்.

விஜய் பாடும் பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் என்று சொல்லலாம். குறிப்பாக துப்பாக்கி படத்தில் 'கூகுள் கூகுள்', 'தலைவா படத்தில் 'வாங்கண்ணா வணக்கமுங்கண்ணா', 'ஜில்லா படத்தில் 'கண்டாங்கி', 'கத்தி' படத்தில் 'செல்பி புள்ளே', 'புலி' படத்தில் 'ஏண்டி ஏண்டி', 'தெறி படத்தில் 'செல்லா குட்டி', 'பைரவா படத்தில் 'பாப்பா பாப்பா' போன்ற பாடல்களை கூறலாம்.

இந்த நிலையில் தளபதி விஜய் தற்போது நடித்து கொண்டிருக்கும் 'மெர்சல்' படத்திலும் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இதே போல் ஒரு பாடலை பாடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில் இந்த படத்தில் விஜய் பாடவில்லை என்ற தகவல் வெளிவந்துள்ளது. இந்த தகவல் விஜய் ரசிகர்களுக்கு ஒரு சிறிய ஏமாற்றமாக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment