'ஜவான்' படத்தில் விஜய் கேமியோ இல்லை.. அதற்கு பதிலாக இந்த பிரபலம் தான்.. மாஸ் தகவல்...!

  • IndiaGlitz, [Wednesday,August 30 2023]

ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன் நடிப்பில் அட்லி இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ’ஜவான்’. இந்த படம் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது.

இந்த படத்திற்கு ஏற்கனவே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் ’பதான்’ படம் போலவே இந்த படமும் 1000 கோடி ரூபாய் வசூல் செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் இந்த படத்தில் தளபதி விஜய் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாக வதந்திகள் கிளம்பி வரும் நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி விஜய் சிறப்பு தோற்றத்தில் நடிக்க வில்லை என்றும் அதற்கு பதிலாக பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் தான் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது படம் வெளியாகும் போது தான் தெரியவரும்.

ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், பிரியாமணி, யோகிபாபு, அம்ரிதா ஐயர் ஆகியோர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவும், ரூபன் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர். ஷாருக்கானின் ரெட் சில்லி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்த படத்தை சுமார் ரூ.300 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

More News

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ்: மலையாள வெப் சீரிஸ் மாஸ்டர்ஃபீஸ் டீசர் வெளியீடு !!

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்கும்  இரண்டாவது மலையாள வெப் சீரிஸ் "மாஸ்டர்ஃபீஸ்" டீசர் வெளியாகியுள்ளது.

ஸ்ரீகாந்த் தேவாவுக்கு கிடைத்த தேசிய விருது: 'கருவறை' இயக்குனரை பாராட்டிய இளையராஜா

இவி.கணேஷ்பாபு கதை,திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி தயாரித்திருக்கும்  கருவறை குறும்படத்திற்காக  அதன் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவிற்கு  தேசிய விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து,

டீசர் வெளியீட்டு விழா.. மீடியா முன் நடிகையின் கன்னத்தில் முத்தமிட்ட இயக்குனர்.. வைரல் வீடியோ..!

ஒரு திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் அந்த படத்தில் நடித்த நடிகையை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

மெக்காவில் கதறி அழுத நடிகை.. வீடியோ வைரலானதால் பரபரப்பு..!

பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் மெக்காவுக்கு சமீபத்தில் புனித யாத்திரை சென்ற நிலையில் அங்கு அவர் மெக்கா மசூதி முன் நின்று கதறி அழும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள

நடிகர் சிம்பு மீது வேல்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

நடிகர் சிம்பு மீது வேல்ஸ் தயாரிப்பு நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த நிலையில் இந்த வழக்கில் முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.