விஜய் ஒன்றும் அஜித்தோ, மகேஷ்பாபுவோ அல்ல.. ரசிகரின் கருத்துக்கு பதிலடி கொடுத்த வெங்கட் பிரபு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் ஒன்றும் அஜித்தோ, அல்லது மகேஷ்பாபுவோ என்றும் ஹாலிவுட் ரீமேக் படத்திற்கு அவர் செட்டாக மாட்டார் என்றும் அவருக்கேற்ற தெலுங்கு ரீமேக் படத்தை எடுக்கவும் என்றும் இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு ரசிகர் ஒருவர் அறிவுரை கூறிய நிலையில் அதற்கு வெங்கட் பிரபு பதிலடி கொடுத்துள்ளார்.
விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்திற்கு ’G.O.A.T’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது என்பதும் இந்த டைட்டில் போஸ்டர் இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வருகிறது என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில் ரசிகர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் வெங்கட்பிரவுக்கு டேக் செய்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதில் ’2023 ஆம் ஆண்டில் ’வாரிசு’ ’லியோ’ படங்களின் தோல்வியால் துவண்டு இருக்கும் விஜய், 2024 இல் ஒரு நல்ல வெற்றியை எதிர்பார்க்கிறார். நீங்கள் ஏதேனும் ஹாலிவுட் ரீமேக் படத்தை இயக்க திட்டமிட்டு இருந்தால் அதற்கு விஜய் பொருத்தமானவர் அல்ல என்று நினைக்கிறேன். ஏனெனில் விஜய் ஒன்றும் அஜித்தோ, அல்லது மகேஷ்பாபுவோ அல்ல.
ஒரு சில நல்ல தெலுங்கு ரீமேக் படங்கள் மட்டுமே விஜய்க்கு செட் ஆகும். அதில் கிடைத்த வெற்றியில் தான் அவர் திரையுலகில் நிலைத்து இருக்கிறார். எனவே நீங்கள் ஒரு நல்ல தெலுங்கு படத்தை வாங்கி அதை விஜய்க்காக ரீமேக் செய்ய வேண்டும் என்பது என்னுடைய ஆலோசனை. ஒருவேளை நீங்கள் ஹாலிவுட் படத்தை தான் செய்யப் போகிறீர்கள் என்றால் இதற்கு முன் ஹாலிவுட் படங்களை சுட்டு வெளியான ’லியோ’ படத்தின் தோல்வியை மனதில் வைத்துக் கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்’ என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள வெங்கட் பிரபு ’மன்னித்துக் கொள்ளுங்கள் சகோதரரே, நான் உங்களிடம் இருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன், புத்தாண்டு வாழ்த்துக்கள், அன்பை மட்டும் பகிரவும்’ என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Sorry bro!! Innum unga kiterndhu edhirpaakuren!! Happy new year!! Spread love❤️ https://t.co/ZN4JM4TBVp
— venkat prabhu (@vp_offl) December 31, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments