மகனை போல் எங்கள் வேதனையில் பங்கெடுத்தார்: விஜய் குறித்து தூத்துகுடி பெண்
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நேற்று நள்ளிரவு தூத்துகுடி சென்று துப்பாக்கி சூடு சம்பவத்தால் பலியானவர்களின் குடும்பத்தினர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, அவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவியும் செய்தார்.
விஜய் வருகை குறித்து பலியாவரின் உறவினர் பெண் ஒருவர் கூறியபோது, 'நள்ளிரவு 2 மணிக்கு இரண்டு மோட்டார் சைக்கிள் எங்கள் வீடு அருகே நின்றது. இந்த நேரத்தில் யார் என்று நாங்கள் கதவை திறந்து பார்த்தபோது விஜய் நின்றிருந்தார்.
நேரம் பிந்தி வந்ததற்காக கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்டு கொண்ட விஜய், எங்கள் துயரத்தில் ஒரு மகனை போல் பங்கெடுத்து கொண்டார். புகைப்படம் கூட எடுக்க வேண்டாம் என்று கூறி மிக எளிமையாக நடந்து கொண்டார். அவருடைய வருகை எங்களுக்கு மிகுந்த ஆறுதலாக இருந்தது என்று கூறியுள்ளார்
நிதியுதவி எதுவும் செய்யாமல் வெறும் புகைப்படங்கள் மட்டும் எடுத்து விளம்பரத்திற்காக சென்ற ஒருசிலரின் மத்தியில் எளிமையாக சென்று தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை விஜய் சென்று பார்த்ததை பலரும் பாராட்டி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments