விஜய் இப்போது உண்மையாகவே மேஜிக்மேனா?

  • IndiaGlitz, [Saturday,August 26 2017]

தளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தில் அவர் மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த மூன்று வேடங்களில் ஒன்று அவர் இதுவரை நடித்திராத மேஜிக்மேன் வேடம்.

இந்த வேடத்தின் சில மேஜிக் காட்சிகளில் விஜய் ஒரு உண்மையான மேஜிக்மேன் போல் மேஜிக் செய்து அசத்தியுள்ளாராம். இதற்கு காரணம் விஜய் உண்மையாகவே ஒரு மேஜிக்மேனிடம் இரண்டு மாதங்கள் முழு ஈடுபாட்டுடன் பயிற்சி எடுத்துள்ளார். இந்த பயிற்சியின் காரணமாகவே அவர் மேஜிக்மேனாக மாறி, மேஜிக் சம்பந்தப்பட்ட காட்சிகளில் எந்தவித டிரிக்களும் இல்லாமல் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

கோலிவுட் திரையுலகில் சின்ன நடிகர்கள் முதல் சூப்பர் ஸ்டார் நடிகர்கள் வரை தாங்கள் எடுத்து கொண்ட கேரக்டர்களை மெருகேற்ற உண்மையாகவே டூப் இன்றி நடித்து வருவது சினிமா அடுத்த கட்டத்தை நோக்கி வளர்ந்து வருகிறது என்பதை நிரூபணம் செய்து வருகிறது.