25 வருடங்களுக்கு முன்பே விஜய் சூப்பர் ஸ்டார் ஆவார் என கணித்த நடிகர்!

  • IndiaGlitz, [Monday,May 02 2022]

25 வருடங்களுக்கு முன்பே ’விஜய் ஒரு சூப்பர் ஸ்டார் ஆவார்’ என பிரபல நடிகர் ஒருவர் கணித்ததாக அளித்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.

தளபதி விஜய் தற்போது நடித்து வரும் ’தளபதி 66’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பவர் நடிகர் சரத்குமார். இவர் சமீபத்தில் ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், ‘தளபதி 66 படத்தின் படப்பிடிப்பில் இம்மாதம் நான் இணைய உள்ளேன் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் வரை நடைபெற இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் இந்த படத்தின் கதையை என்னால் சொல்ல முடியாது என்றாலும் இந்த படத்தின் கதை மிகவும் பவர்ஃபுல் ஸ்கிரிப்ட் என்றும் இந்த படத்தில் உள்ள ஒவ்வொரு கேரக்டருக்கும் முக்கியத்துவம் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் இந்த படம் அனைத்து வகையான பார்வையாளர்களும் கவரும் வகையில் உள்ள கதையம்சம் கொண்டது என்றும் இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிப்பது மிகவும் மகிழ்ச்சி என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் இந்த படத்தின் பூஜையின்போது விஜய்யிடம் நான் பேசியபோது 25 வருடங்களுக்கு முன் ‘சூர்யவசம்’ படத்தின் 250-வது நாள் விழா கமலா தியேட்டரில் நடந்த போது ‘விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று தான் பேசியதை நினைவு படுத்தியதாகவும், விஜய்யும் தான் அதை மறக்கவில்லை என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார். இந்த பேட்டி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.