தவெக கட்சி கொடியை அறிமுகம் செய்கிறார் விஜய்... தேதி இதுதான்..!

  • IndiaGlitz, [Monday,August 19 2024]

தமிழக வெற்றி கழகத்தின் கொடியை நடிகர் விஜய் அறிமுகம் செய்யும் தேதி குறித்த தகவல் தெரியவந்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் இந்த கட்சி வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் களத்தில் இறங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கட்சி கொடி அறிமுகம், முதல் மாநாடு உள்பட சில முக்கிய பணிகளில் இருக்கும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், ஆகஸ்ட் 22ஆம் தேதி தனது கட்சியின் கொடியை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

கட்சிக்கொடி அறிமுகம் ஆகும் தினத்தில் கலந்து கொள்ள 250 மாவட்ட நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் 40 அடி உயரத்தில் கொடி கம்பம் அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது

கட்சிக்கொடி அறிமுகம் செய்த பின் முதல் மாநாடு நடத்த இருப்பதாகவும் அதன் பிறகு தமிழக முழுவதும் விஜய் சூறாவளி சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது