பாலக்காடு துணை கலெக்டருடன் விஜய் ஆலோசனை

  • IndiaGlitz, [Saturday,August 13 2016]

சமீபத்தில் பாலக்காடு துணை கலெக்டர் அட்டப்பாடி என்ற பின்தங்கிய கிராமத்திற்கு சென்றதாகவும், அங்கு கழிவறை உள்பட அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லாத நிலையிலும் அந்த கிராமத்து இளைஞர்கள் விஜய்யின் ரசிகர்களாக இருந்ததாகவும் வெளிவந்த செய்தியினை பார்த்தோம். மேலும் விஜய் அலுவலகத்திற்கு தொடர்பு கொண்ட துணைகலெக்டர், அந்த கிராமத்திற்கு விஜய் வருகை தந்தால், அக்கிராம மக்களிடம் கல்வி, அடிப்படை வசதிகள் குறித்த விழிப்புணர்ச்சி ஏற்படும் என்றும் வேண்டுகோள் விடுத்தார் என்பதையும் பார்த்தோம்.
இந்நிலையில் இன்று பாலக்காடு துணை கலெக்டரை நடிகர் விஜய் நேரில் சந்தித்து பேசியுள்ளார். இதன் மூலம் விரைவில் விஜய் அட்டப்பாடி கிராமத்திற்கு செல்லும் தேதி குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெறும் பொழுதுபோக்கு திரைப்படங்களை தருவது மட்டுமின்றி நடிகர்களால் சமுதாயத்தில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த முடியும் என்பதற்கு இந்த சந்திப்பு நல்ல உதாரணமாக கருதப்படுகிறது. விஜய்யால் ஒரு கிராமமே விமோசனம் ஆகப்போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சிம்புவின் 'AAA' படத்தில் டி.ஆர் கனெக்ஷன்

'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்'...

'ஜோக்கர்' தயாரிப்பாளருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி

பிரபல எழுத்தாளர் ராஜூமுருகன் இயக்கிய 'குக்கூ' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து அவருடைய அடுத்தபடமான 'ஜோக்கர்'...

'விஜய் 60' டைட்டில் படக்குழுவினர்களின் அதிகாரபூர்வ அறிக்கை

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 60' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் எம்.ஜி.ஆர்...

அஜித்துக்கு அப்புக்குட்டி காட்டிய நன்றிக்கடன்

'அழகர்சாமியின் குதிரை' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகர் அப்புக்குட்டி அஜித் நடித்த வீரம்' உள்பட பல படங்களில் நடித்துள்ளார்..

சீயான் விக்ரமின் இருமுகன் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி

விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள 'இருமுகன்' திரைப்படத்தின் டிரைலரும், பாடல்கள் மாபெரும் வரவேற்பு பெற்றதை அடுத்து இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு பெரிய அளவில் உள்ளது...