'கபாலி' குறித்து தாணுவிடம் விஜய் அளித்த கமெண்ட்

  • IndiaGlitz, [Wednesday,May 25 2016]

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' என ஒரே நேரத்தில் இரண்டு பெரிய நடிகர்களின் படங்களை தயாரித்துள்ள தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, 'கபாலி' குறித்து விஜய் அவ்வப்போது தன்னிடம் விசாரித்து வந்ததாகவும், விஜய்யே ஒரு தீவிர ரஜினி ரசிகர் என்பதால் 'கபாலி' குறித்த தகவல்களை தெரிந்து கொள்வதில் அவர் மிகுந்த ஆர்வம் காட்டியதாகவும் கூறியுள்ளார்.

'கபாலி' படம் குறித்து தான் கூறிய விஷயங்களை கேட்டவுடன் 'கலக்குறிங்க சார் தலைவரை வச்சு' என்று விஜய் கமெண்ட் அடித்ததாகவும் இதில் இருந்து கோடிக்கணக்கான ரஜினி ரசிகர்களை போலவே விஜய்யும் இந்த படத்தின் ரிலீஸை பெரிதும் எதிர்பார்த்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

ரஜினியும் விஜய்யும் கோலிவுட் திரையுலகில் மிகப்பெரிய ஓப்பனிங் வசூலை கொடுக்கும் நடிகர்களாக இருந்தும் ஒருவர் படத்தை இன்னொருவர் மிக ஆர்வமுடன் எதிர்நோக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.