கைவிரலில் மட்டுமல்ல.. இன்னொரு முக்கிய இடத்திலும் காயம்.. 'கோட்' படப்பிடிப்பில் விஜய்க்கு என்ன ஆச்சு?
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்து வரும் ‘கோட்’ படத்தின் படப்பிடிப்பின் போது ஒரு சின்ன விபத்து ஏற்பட்டதாகவும் அதில் விஜய்க்கு கைவிரலில் காயம் ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் அவர் சமீபத்தில் வாக்களிக்க வந்த போது கூட அந்த காயம் குறித்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலானது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் விஜய்க்கு கைவிரலில் மட்டுமல்ல, இன்னொரு முக்கிய இடத்திலும் காயம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
‘கோட்’ படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் அங்கு ஒரு பைக் சேசிங் காட்சி படமாக்கப்பட்டதாகவும் அப்போது எதிர்பாராத விதமாக பைக்கில் இருந்து விஜய் கீழே விழுந்து விட்டதால் அவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது.
இதனை அடுத்து மாஸ்கோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் விஜய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் அப்போது அவருக்கு கை விரல் மற்றும் பின்னந்தலையிலும் லேசான காயம் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் விஜய் கண்டிப்பாக ஒரு வாரம் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர் அறிவுறுத்திய நிலையில் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக அவர் சென்னை திரும்பினார். மேலும் துபாயில் பல மணி நேரம் அவர் விமானத்திற்காக காத்திருந்ததால் மிகவும் சோர்வாக காணப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் ஒரு சில நாட்கள் சென்னையில் தனது வீட்டில் ஓய்வு எடுக்கும் விஜய் அதன் பின் மீண்டும் ‘கோட்’ படத்தின் படப்பிடிப்புக்காக ரஷ்யா செல்ல இருக்கிறார். இன்னும் ஒரு சில வாரங்களில் ‘கோட்’ படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு முடிவடைந்து விடும் என்றும் கூறப்படுகிறது.
விஜய், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பார்வதி நாயர், மோகன், ஜெயராம், அஜ்மல், யோகிபாபு, விடிவி கணேஷ், வைபவ், பிரேம்ஜி, கஞ்சா கருப்பு உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். யுவன்ஷங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout