2024 தேர்தலில் யாருக்கு ஓட்டு? ரசிகர்களுக்கு மறைமுக மெசேஜ் கொடுத்தாரா விஜய்?
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் இந்த அரசியல் கட்சி 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிடும் என்றும் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடாது என்றும் விஜய் தெளிவாக கூறியிருந்தார் என்பது தெரிந்தது.
இருப்பினும் வரும் பாராளுமன்ற தேர்தலில் தனது ரசிகர்கள் யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்று விஜய் இதுவரை தெரிவிக்காத நிலையில் சமீபத்தில் அவர் கூறிய வாழ்த்து செய்தியில் ரசிகர்களுக்கு அவர் மறைமுக செய்தி கூறியிருப்பதாக தகவல் பரவிக் கொண்டிருக்கிறது.
ஏப்ரல் 14ஆம் தேதி அம்பேத்கர் பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்து விஜய் தனது சமூக வலைத்தளத்தில் ’அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளில் சமூக நீதி, சமத்துவம், சம உரிமை ஆகியவை கிடைக்க உறுதி ஏற்போம்’ என்று தெரிவித்துள்ளார். அன்றைய தினம் சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டு என்பதாக இருந்தாலும் தமிழ் புத்தாண்டுக்கு வாழ்த்து தெரிவிக்காமல் அம்பேத்கர் பிறந்த நாளுக்கு மட்டும் அவர் வாழ்த்து தெரிவித்திருப்பதை அடுத்து திராவிட கட்சிகளை அவர் மறைமுகமாக ஆதரிக்க உள்ளதாகவும் தனது ரசிகர்களுக்கு வரும் தேர்தலில் இந்த திராவிட கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என்ற மறைமுக மெசேஜ் கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் இதெல்லாம் வெறும் யூகம்தான் என்றும் விஜய் தனது ரசிகர்களுக்கு வரும் பாராளுமன்ற தேர்தலில் அவரவர் இஷ்டம் போல் தங்களுக்கு பிடித்த கட்சிகளுக்கு வாக்களிக்கலாம் என்று தான் கூறியிருப்பதாகவும் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு மட்டும் வாக்களிக்க வேண்டும் என்ற மெசேஜ் அவர் யாருக்கும் அனுப்பவில்லை என்றும் இன்னொரு தரப்பினர் கூறியுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout