விஜய்யின் 'புலி' பட விவகார வழக்கு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

  • IndiaGlitz, [Tuesday,August 16 2022]

தளபதி விஜய் நடித்த ‘புலி’ படத்துக்காக அவர் பெற்ற சம்பளத்தை மறைத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

விஜய் நடித்த ‘புலி’ திரைப்படத்தில் அவர் 15 கோடி ரூபாய் வாங்கிய சம்பளத்தை மறைத்ததாக வருமான வரித்துறை சமீபத்தில் ரூபாய் ஒன்றரை கோடி அபராதம் விதித்தது. வருமான வரித்துறையின் இந்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்து 2016 - 17 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் நடிகர் விஜய் செய்தபோது அதில் அவருடைய வருமானம் என 35,42,91,890 என குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் நடிகர் விஜய் வீட்டில் கடந்த 2015ம் ஆண்டு நடத்திய வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ‘புலி’ படத்திற்கு சம்பளமாக பெற்ற 15 கோடி ரூபாயை கணக்கில் காட்டவில்லை என கண்டறியப்பட்டது. 15 கோடி ரூபாய் வருமானத்தை மறைத்ததற்காக ஒன்றரை கோடி ரூபாயை அவருக்கு வருமான வரித்துறை அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் அபராதம் விதிப்பதாக இருந்தால் 2019 ஆம் ஆண்டிலேயே உத்தரவு பிறப்பித்து இருக்க வேண்டும் என்றும் தாமதமாக பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் விஜய் தரப்பில் கூறப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி வருமான வரித்துறையின் அபராத உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து வருமானவரித்துறை இதற்கு பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கின் அடுத்த விசாரணை செப்டம்பர் 16ஆம் தேதி நடைபெறும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

More News

வனிதா விஜயகுமாரின் 'இரவு பார்ட்டி': காமெடி நடிகருடன் செம ஆட்டம்!

 நடிகை வனிதா விஜயகுமார் நேற்று நடத்திய இரவு பார்ட்டியில் காமெடி நடிகர் ரோபோ சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது 

3 வருடம் காதல், 3 வருடம் திருமண வாழ்க்கை: கணவரை விவாகரத்து செய்த பிக்பாஸ் தமிழ் பிரபலம்!

 பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் தனது கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்து இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நீங்கள் ஒரு தெய்வக்குழந்தை: ரஜினியின் 47 வருட திரையுலக வாழ்க்கைக்கு வாழ்த்து கூறிய இருவர்!

ரஜினிகாந்த் அவர்கள் திரையுலகில் நுழைந்து 47 ஆண்டுகள் ஆனதை அடுத்து அவருக்கு திரையுலகினர் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் ரஜினியின் இரண்டு மகள்களும் தங்களது சமூக வலைதள பக்கத்தில்

உங்களுக்கு சுதந்திரம் கிடைச்சா மட்டும் என்னடா ஆகப்போவுது: ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் டீசர்!

பிரபல இயக்குநர் ஏஆர் முருகதாஸ் தயாரிப்பில் உருவான 'ஆகஸ்ட் 16, 1947' என்ற படத்தின் டீசர் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

நயனை முத்தமிடும் விக்கி: இரண்டாவது ஹனிமூன் புகைப்படங்கள்!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த மாதம் திருமணம் செய்த நிலையில் தாய்லாந்து நாட்டிற்கு ஹனிமூன் சென்றனர் என்பதும், இதுகுறித்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரல் ஆனது