பிறந்தநாள் அன்று எங்கு இருப்பார் விஜய்

  • IndiaGlitz, [Wednesday,June 15 2016]

இளையதளபதி விஜய்யின் பிறந்தநாளுக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளதால் அவருடைய இந்த வருட பிறந்த நாளை மிக பிரமாண்டமாக கொண்டாட விஜய் ரசிகர்கள் சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் விஜய்யின் சென்னை ரசிகர்கள் அப்செட் ஆகும்படியான ஒரு செய்தி தற்போது வெளிவந்துள்ளது. அதாவது விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22ஆம் தேதி விஜய் சென்னையில் இருக்க மாட்டார் என்றும் அன்றைய தினம் அவர் ஐதராபாத்தில் பரதன் இயக்கி வரும் 'விஜய் 60' படத்தின் படப்பிடிப்பில் இருப்பார் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

'விஜய் 60' படத்தின் ஐதராபாத் படப்பிடிப்பு ஜூன் 25 வரை என்று ஏற்கனவே திட்டமிட்டுள்ளதால் அதில் எந்த மாற்றமும் செய்யப்படமாட்டாது என்றும் இந்த வருட பிறந்தநாளை விஜய் படக்குழுவினர்களுடன் மட்டுமே கொண்டாடவுள்ளதாகவும் கூறப்படுகிறது. பிறந்த நாள் அன்று விஜய்யை சென்னையில் சந்திக்க நினைத்த ரசிகர்களுக்கு இந்த தகவல் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

டாப்ஸியின் முதுகில் இருப்பது என்ன?

தனுஷின் 'ஆடுகளம்' படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் ஆரம்பம், காஞ்சனா 2, வை ராஜா வை' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பிரபல நடிகை டாப்சி...

ஜெயம் ரவியின் 'போகன்' ரிலீஸ் எப்போது?

கடந்த ஆண்டு நான்கு வெற்றி படங்களில் நடித்த ஜெயம் ரவி இந்த வருடம் இதுவரை 'மிருதன்' படத்தில் மட்டுமே நடித்துள்ளார்...

சுந்தர் சிக்கு வில்லனான பிரபல காமெடி நடிகர்

கோலிவுட் திரையுலகில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி அதன் பின்னர் 'விண்ணை தாண்டி வருவாயோ' படத்தில் சிம்புவின் நண்பராக நடித்தவர் விடிவி கணேஷ்...

ரஜினி பிறந்த நாளில் லைகா தரும் இன்ப அதிர்ச்சி

சூப்பர் ஸ்டார் நடித்துள்ள 'கபாலி' படத்தின் செய்திகளே இணையதளங்களில் தினமும் டிரெண்டை ஏற்படுத்தி வரும் நிலையில் அவர் நடித்து வரும் இன்னொரு படமான '2.0' படத்தின் செய்திகளும் அவ்வபோது சமூக வலைத்தளங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றது...

'உட்தா பஞ்சாப்' படத்தின் வெற்றி எங்கள் வெற்றி : சசிகுமார்

இயக்குனர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் ஷாஹித் கபூர், கரீனா கபூர் நடித்த 'உட்தா பஞ்சாப்' படத்திற்கு சென்சார் போர்டு செய்த கெடுபிடிகள், அதனை அடுத்து மும்பை நீதிமன்றம்...