தொடங்கிவிட்டது 'வாரிசு' திருவிழா.. ரிலீஸ் தகவலுடன் செம போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

  • IndiaGlitz, [Wednesday,November 30 2022]

தளபதி விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருப்பதாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பொங்கல் தினத்தில் ரிலீஸ் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் பொங்கல் தினத்தில் வெளியாகும் அஜித்தின் ‘துணிவு’ படத்திற்கு அதிக திரையரங்குகள் கிடைத்துள்ளதால் ‘வாரிசு’ திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாவது சந்தேகம் என சமூக வலைதளங்களில் வதந்தி கிளம்பியது.

இந்த நிலையில் படக்குழுவினர் ‘வாரிசு’ திரைப்படம் பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆவதை உறுதி செய்யும் வகையில் அட்டகாசமான போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டரில் காரின் மேல் உட்கார்ந்து டீ கிளாசை விஜய் கையில் வைத்திருப்பது போல் உள்ளது.

அட்டகாசமாக உள்ள இந்த போஸ்டரில் ‘வாரிசு’ திரைப்படம் பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆவதை படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சென்னை சத்யம் தியேட்டரில் 'வாரிசு’ படத்தின் பிரமாண்டமான பேனர் வைக்கப்பட்டுள்ளதை அடுத்து ‘வாரிசு’ திருவிழா விஜய் ரசிகர்கள் மத்தியில் தொடங்கிவிட்டது என்று எடுத்துக்கொள்ளலாம்.

விஜய், ராஷ்மிகா மந்தனா பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, உள்பட பலர் நடித்து வரும் இந்த படம் கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவிண் கே.எல் படத்தொகுப்பில் உருவாகி வருகிறது. தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ளது.
 

More News

பிக்பாஸ் சீசன் 6: இந்த இருவரில் ஒருவரா இந்த வாரம் வெளியேறுவது?

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 50 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது தான் நிகழ்ச்சி சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் சென்று கொண்டிருக்கிறது

பூனைக்கு மணியை கட்ட புலியா வந்துட்டா.. விஷ்ணு விஷாலின் 'கட்டா குஸ்தி' பாடல்!

விஷ்ணு விஷால் நடிப்பில் உருவான  'கட்டா குஸ்தி'  திரைப்படம் விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். 

தெருநாய்களுக்காக ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கிய பிரபல நடிகை.. குவியும் வாழ்த்துக்கள்!

மனிதர்களுக்கு விபத்துக்கள் நேர்ந்தால் உடனடியாக ஆம்புலன்ஸ் சேவையின் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருவது போல், தெரு நாய்களுக்கும் ஆம்புலன்ஸ் சேவையை பிரபல நடிகை ஒருவர்

சினிமாவில் இருந்து விலகுகிறாரா சாய்பல்லவி? இந்த ஒரு காரணம் தான்!

நடிகை சாய் பல்லவி சினிமாவில் இருந்து விலக இருப்பதாகவும் அவர் தான் படித்த டாக்டர் தொழிலை கவனிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

அன்லிமிடெட் பாப்கார்ன் வழங்கிய திரையரங்கம்: எவ்வளவு ரூபாய் தெரியுமா?

450 ரூபாய்க்கு எவ்வளவு பெரிய பாத்திரம் கொண்டு வந்தாலும் அந்த பாத்திரம் நிறையும் அளவுக்கு பாப்கார்னை தாய்லாந்து திரையரங்கம் வழங்கி வருகிறது.