விஜய்யின் 'வாரிசு' படத்தின் செம அப்டேட்.. அதிகாரபூர்வ அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.
வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் ‘வாரிசு’ படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் என்பதும் ஏற்கனவே இந்த படத்தின் வியாபாரம் கோலிவுட் திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ‘வாரிசு’ படத்தின் அப்டேட் இன்று வெளியாக வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் சற்று முன் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் ‘வாரிசு’ படத்தின் சிங்கிள் பாடலின் புரமோ இன்று மாலை 6.30 து மணிக்கு வெளியாகும் என்று அறிவித்துள்ளது.
இந்த படத்தில் விஜய் ஒரு பாடலை பாடி உள்ள நிலையில் அந்த பாடல்தான் புரமோவாக இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் முறையாக விஜய் படத்திற்கு தமன் இசையமைத்துள்ள நிலையில் விஜய்க்காக தமன் கம்போஸ் செய்த பாடல் எப்படி இருக்கும் என்பதை கேட்க விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் இந்த பாடலை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது.
விஜய், ராஷ்மிகா மந்தனா பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, உள்பட பலர் நடித்து வரும் இந்த படம் கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவிண் கே.எல் படத்தொகுப்பில் உருவாகி வருகிறது. தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகி வருகிறது
The much-awaited #VarisuFirstSingle promo is releasing Today at 6:30 PM ??
— Sri Venkateswara Creations (@SVC_official) November 3, 2022
Stay Tuned nanba ??#Thalapathy @actorvijay sir @directorvamshi @iamRashmika @MusicThaman #BhushanKumar #KrishanKumar #ShivChanana @TSeries#Varisu #VarisuPongal pic.twitter.com/uriUcF2vrn
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com