முழுக்க முழுக்க வதந்தி, யாரும் நம்ப வேண்டாம்: 'வாரிசு' தயாரிப்பு நிறுவனம் அறிக்கை!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்தி முழுக்க முழுக்க வதந்தி என்றும் அதனை யாரும் நம்பவேண்டாம் என்றும் தளபதி விஜய்யின் ‘வாரிசு’ உள்பட பல திரைப்படங்களை தயாரித்து வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்திற்காக அறிமுக நட்சத்திரங்கள் தேர்வு செய்யப்பட இருப்பதாகவும் அதற்காக விண்ணப்பிக்கலாம் என்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகிறது. இதனை நம்பி பலர் விண்ணப்பித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இதுகுறித்து ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அந்த விளக்கத்தில் எங்கள் நிறுவனம் தயாரித்து வரும் ’ஆர்சி 15’ எஸ்.வி.சி 50’ படங்கள் உள்பட எந்த படத்திற்கும் நாங்கள் அறிமுக நடிகர்களை தேர்வு செய்யவில்லை. இதுகுறித்து வெளியாகி வரும் அனைத்தும் செய்திகளும் முழுக்க முழுக்க வதந்தி. எனவே தயவு செய்து அந்த தகவலை நம்பி யாரும் ஏமாற வேண்டாம். என்று தெரிவித்துள்ளது. இந்த அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
A note of caution to everyone #RC15 #SVC50 pic.twitter.com/KRPiykeCk2
— Sri Venkateswara Creations (@SVC_official) July 24, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com