மீண்டும் ஹீரோவான 'வாரிசு' பட நடிகர்.. ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிட்ட 'கோட்' இயக்குனர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படத்தில் விஜய்யின் சகோதரர்களில் ஒருவராக நடித்த நடிகர் ஷாம், கடந்த 2000 ஆண்டுகளில் பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்தார் என்பதும் ’12பி’, ’லேசா லேசா’ உள்பட அவருடைய பல திரைப்படங்கள் வெற்றி பெற்றன என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் தற்போது மீண்டும் ஹீரோவாக அவர் நடித்திருக்கும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய்யின் ’கோட்’ படத்தை இயக்கி வரும் இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது வைரல் ஆகி வருகிறது.
ஷாம் நடித்த இந்த படத்திற்கு ‘அஸ்திரம்’ என்ற டைட்டிலோடு ‘தி சீக்ரெட்’ என்ற கேப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை அரவிந்த் ராஜகோபால் என்பவர் இயக்கியுள்ளார். மேலும் கல்யாண் வெங்கட்ராமன் ஒளிப்பதிவில், சுந்தரமூர்த்தி இசையில், பூபதி வேதகிரி படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரே சற்று வித்தியாசமாக உள்ளது. குறிப்பாக ஒரு கடிகாரத்தின் நடுவில் ஷாம், ஒரு புத்தகத்தை எரிக்கும் வகையில் இருப்பதை பார்க்கும் போது இந்த படத்தில் ஏதோ வித்தியாசமாக இயக்குனர் சொல்ல வருகிறார் என்பது தெரிய வருகிறது. இந்த படத்தின் அடுத்தடுத்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Happy to share the first look and the title of Shaam’s upcoming movie Asthram. Congratulations Team, wishing you all success.
— venkat prabhu (@vp_offl) February 4, 2024
Asthram is coming soon in cinemas. @shaamactor @iamaravindraja @SundaramurthyKS#Asthram #AsthramTheSecret #Firstlook pic.twitter.com/24yRMgTGGz
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments