சன் டிவியில் அதற்குள் 'வாரிசு' திரைப்படமா? ஓடிடியில் எப்போது?

  • IndiaGlitz, [Thursday,January 19 2023]

அஜித் நடித்த ’துணிவு’ மற்றும் விஜய் நடித்த ‘வாரிசு’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் பொங்கல் விருந்தாக கடந்த 11ஆம் தேதி வெளியான நிலையில் இரண்டு படங்களுமே ஒரே வாரத்தில் 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் திரையரங்குகளை அடுத்து இந்த படம் டிவியில் மற்றும் ஓடிடியில் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ள நிலையில் இதுகுறித்த தகவல் தற்போது கசிந்து உள்ளது.

விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு விருந்தாக சன் டிவியில் ஒளிபரப்பாக இருப்பதாகவும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

அதேபோல் ‘வாரிசு’ திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதி வெளியாகி உள்ள நிலையில் சரியாக ஒரு மாதம் கழித்து அதாவது பிப்ரவரி 10ஆம் தேதி அமேசான் ஓடிடியில் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.