விஜய்யின் 'வாரிசு' படம் காப்பியா? பிரபல நிறுவனம் விளக்கம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் புகைப்படங்கள் சமீபத்தில் அவருடைய பிறந்த நாள் விருந்தாக வெளியாகின என்பதும் இந்த படத்தின் மூன்று புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் இணையதளங்களில் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ‘வாரிசு’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஒன்று பிரபல ஆடை நிறுவனத்தின் போட்டோ ஷூட் புகைப்படத்தின் அப்பட்டமான காப்பி என்று சமூக வலை தளங்களில் செய்திகள் பரவி உள்ளது. மேலும் இரண்டு புகைப்படங்களும் அருகருகே வைக்கப்பட்டு நெட்டிசன்கள் பதிவு செய்து வந்தனர்.
இந்த நிலையில் அந்த ஆடை நிறுவனம் தற்போது இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது. அந்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது: எங்கள் நிறுவனத்திற்காக இதுபோன்ற போட்டோ ஷூட் எதுவும் எடுக்கவில்லை என்றும் மீம்ஸ் கிரியேட்டர்கள் விஜய்யின் புகைப்படத்தை அகற்றிவிட்டு அதில் துல்கர் சல்மானின் படத்தை வைத்துள்ளார்கள் என்றும் எங்கள் நிறுவனத்தின் போட்டோஷூட் புகைப்படத்தின் காப்பிதான் ‘வாரிசு’ ஃபர்ஸ்ட்லுக் என்பது முழுக்க முழுக்க வதந்தி என்றும் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி ‘வாரிசு’ படக்குழுவிற்கு எங்கள் நிறுவனம் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை அடுத்து ‘வாரிசு’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் பிரபல ஆடை நிறுவனத்தின் காப்பி என்பது முழுக்க முழுக்க வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com