ஒரே நாளில் 'வாரிசு' , 'துணிவு' ரிலீஸ்: பிரபல நடிகரின் டுவிட்டால் பரபரப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த ‘வாரிசு’ மற்றும் தல அஜித் நடித்த ‘துணிவு’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் ஒரேநாளில் ரிலீஸாக வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் பொங்கல் தினத்தில் ‘துணிவு’ திரைப்படம் ரிலீஸ் ஆவது உறுதி என பிரபல நடிகர் ஒருவர் தனது டுவிட்டரில் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தளபதி விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படம் பொங்கல் ரிலீஸ் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்னரே உறுதி செய்யப்பட்டது என்பதும் அதை நோக்கி இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ‘துணிவு’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் பாங்காக் சென்றுள்ள நிலையில் இன்னும் 20 நாட்களில் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடித்து விடுவார்கள் என்பது குறிப்பிடதக்கது. எனவே ‘துணிவு’ திரைப்படமும் பொங்கல் தினத்தில் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது .
இந்த நிலையில் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆர்கே சுரேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் 2023 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் உலகம் முழுவதும் ‘துணிவு’ ரிலீஸ் ஆகிறது என்று பதிவு செய்திருக்கிறார். இதனை அடுத்து விஜய்யின் ‘வாரிசு’ மற்றும் அஜீத்தின் ‘துணிவு’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் ரிலீஸாக அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
கடந்த 2014ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் விஜய்யின் ’ஜில்லா’ மற்றும் அஜீத்தின் ’வீரம்’ ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆன நிலையில் எட்டு ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் இருவரது படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
#Thunivu Grand World Wide Release On Pongal 2023 ????#AK61 pic.twitter.com/kHd3G3Qows
— RK SURESH (@studio9_suresh) September 24, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments