விஜய்யின் தவெக முதல் மாநாடு எங்கே? புதிய தகவல்..!

  • IndiaGlitz, [Thursday,August 08 2024]

தளபதி விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் இந்த கட்சி வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விஜய்யும் ’தளபதி 69’ படத்தை முடித்துவிட்டு சினிமாவில் இருந்து விலகி முழுநேர அரசியல்வாதியாக மாற இருப்பதாகவும் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு மதுரை, சேலம், சென்னை உள்ளிட்ட இடங்களில் நடக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது திருச்சியில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருச்சி பொன்மலை ஜி கார்னரில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற இருப்பதாகவும், இந்த இடம் ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ளது என்பதால் இந்த இடத்திற்கு அனுமதி கேட்டு கட்சி நிர்வாகிகள் கடிதம் எழுதி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து ஜி கார்னர் மைதானத்தை அளவிடும் பணிகள் தற்போது ரயில் ஊழியர்கள் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டில் தனது கட்சியின் கொடியை விஜய் அறிமுகம் செய்வார் என்றும் சில முக்கிய நிர்வாகிகள் அறிவிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

More News

நாக சைதன்யா திருமண நிச்சயதார்த்தம்.. பொன்னியின் செல்வன் நடிகை தான் மணமகள்..!

நடிகை சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா மற்றும் பிரபல நடிகை இடையே திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ள நிலையில் திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகரானார் சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணன்.. எப்படி சம்மதிக்க வைத்தார் இயக்குனர்?

சூப்பர் ஸ்டார் ரஜினியின் சகோதரர் சத்யநாராயண ராவ் அவர்களை நடிக்க வைக்க பல இயக்குனர்கள் முயற்சி செய்த நிலையில் அவர்களுக்கெல்லாம் நோ சொன்ன அவர்

'மார்க் ஆண்டனி' டீம் உடன் இணையும் ஆர்யா.. பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பம்..!

விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யா நடித்த 'மார்க் ஆண்டனி' என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படத்தில் நடிகர் ஆர்யா நடிக்கவுள்ளார்.

ஒரே படத்தில் சிவகார்த்திகேயன் - லோகேஷ் கனகராஜ்.. வேற லெவல் தகவல்..!

கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய் என மாஸ் நடிகர்களின் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக சிவகார்த்திகேயன் படத்தில் பணிபுரிய இருப்பதாக கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அனுமோகன் பகிர்ந்த ஆன்மீக ரகசியங்கள்: வீட்டு வழிபாடு முதல் திருவண்ணாமலை வரை

பிரபல நடிகர் அனுமோகன், ஆன்மீகக்ளிட்ஸ் சேனலில் தனது ஆன்மீக அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.