close
Choose your channels

விஜய்யின் தவெக முதல் மாநாடு எங்கே? புதிய தகவல்..!

Thursday, August 8, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் இந்த கட்சி வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விஜய்யும் ’தளபதி 69’ படத்தை முடித்துவிட்டு சினிமாவில் இருந்து விலகி முழுநேர அரசியல்வாதியாக மாற இருப்பதாகவும் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு மதுரை, சேலம், சென்னை உள்ளிட்ட இடங்களில் நடக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது திருச்சியில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருச்சி பொன்மலை ஜி கார்னரில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற இருப்பதாகவும், இந்த இடம் ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ளது என்பதால் இந்த இடத்திற்கு அனுமதி கேட்டு கட்சி நிர்வாகிகள் கடிதம் எழுதி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து ஜி கார்னர் மைதானத்தை அளவிடும் பணிகள் தற்போது ரயில் ஊழியர்கள் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டில் தனது கட்சியின் கொடியை விஜய் அறிமுகம் செய்வார் என்றும் சில முக்கிய நிர்வாகிகள் அறிவிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment