close
Choose your channels

கட்சி தொடங்கி ஒரே வாரத்தில் ஒரு விக்கெட் காலி.. அப்செட்டில் தவெக நிர்வாகிகள்..!

Saturday, February 10, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் விஜய் சமீபத்தில் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் ஒரு வாரம் முடிவதற்குள்ளாகவே அவருடைய கட்சியின் முக்கிய நிர்வாகி திமுகவில் சேர்ந்து உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தளபதி விஜய் சமீபத்தில் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் இந்த கட்சியை தமிழகம் முழுவதும் வளர்க்க புஸ்ஸி ஆனந்த் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். விஜய்யும் தற்போது நடந்து கொண்டிருக்கும் ’கோட்’ படத்தை முடித்துவிட்டு இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடித்து விட்டு அதன் பிறகு முழு நேர அரசியல்வாதியாக களமிறங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து விஜய் நகர்ந்து வருவதால் அந்த தேர்தல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விஜய் கட்சி ஆரம்பித்த ஒரே வாரத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஆக இருந்த பில்லா ஜெகன் என்பவர் திமுகவில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து அவருடைய சகோதரர் சுமன் என்பவரை தூத்துக்குடி மாவட்ட புதிய செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு திமுகவிலிருந்து பில்லா ஜெகன் நீக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அவர் திமுகவில் இணைந்துள்ளார். கட்சி ஆரம்பித்த ஒரே வாரத்தில் தமிழக வெற்றி கழகத்தின் ஒரு விக்கெட் விழுந்து உள்ளது தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றி கழக தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment