விஜய்-ஜிவி பிரகாஷ் கூட்டணி செய்த சாதனை: சமூக வலைத்தளங்களில் டிரெண்ட்!

  • IndiaGlitz, [Tuesday,June 02 2020]

தளபதி விஜய் நடித்த திரைப்படங்கள் பல சாதனைகள் தொடர்ந்து செய்து கொண்டிருப்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். அந்த வகையில் தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் இசையில் உருவான ’தெறி’ திரைப்படத்தில் இடம்பெற்றா பாடல் ஒன்று செய்த புதிய சாதனை ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் டிரென்ட் ஆகியுள்ளது.

விஜய், சமந்தா, எமிஜாக்சன் நடிப்பில் உருவான திரைப்படமான ’தெறி’ கடந்த 2016ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ’உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே’ என்ற பாடல் யூடிபில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளதாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இந்த பாடல் தனக்கு மிகவும் பிடித்த பாடல் என்றும் இந்த பாடலுக்கு உரிய மரியாதையை அளித்த பார்வையாளர்களுக்கு தனது நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படம் ஜிவி பிரகாஷ் இசை அமைத்து 50வது திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த பாடல் ஒரு மில்லியன் பார்வையாளர்களை பெற்றதாக ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில் தகவல் தெரிவித்ததன் காரணமாக விஜய் ரசிகர்கள் இதுகுறித்த ஹேஷ்டேக்கை சமூகவலைதளத்தில் உருவாக்கி அதனை ட்ரெண்டாக்கி வருகின்றனர். விஜய் சமந்தாவின் காதல், அதன் பின் திருமணம், பின்னர் குழந்தை பிறப்பது, குழந்தைக்கு பெயர் வைப்பது உள்ளிட்ட அனைத்து காட்சிகளுமே இந்த ஒரே பாடலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

கொரோனா அவசரகால சிகிச்சைக்கு Remdesivir மருந்து!!! ஒப்புதல் வழங்கிய இந்தியா!!!

இதுவரை கொரோனா சிகிச்சைக்கு என்று முறைப்படுத்தப் பட்ட எந்த மருந்துகளும் கண்டுபிடிக்கப் படாத நிலையில் Remdesivir

ஆம்பன் புயலை அடுத்து இந்தியாவை தாக்க இருக்கும் இன்னொரு சூறாவளி!!!

இந்தியாவின் அரபிக் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வருகிறது.

வீடு தேடி வருகிறேன்: பிறந்த நாளில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த இளையராஜா

இசைஞானி இளையராஜா அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் என்பதும் அவருக்கு திரையுலக பிரமுகர்கள் அனைவரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்

3வது நாளாக 1000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு: 25 ஆயிரத்தை நெருங்குவதால் பரபரப்பு

இன்று தமிழகத்தில் 1091 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24586 ஆக உயர்ந்துள்ளது

கொரோனாவுக்கு பலியான 9 மாத குழந்தையின் உடலை வாங்க மறுத்த தந்தை: அதிர்ச்சி காரணம்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தனது ஒன்பது மாத குழந்தை திடீரென உயிரிழந்ததை அடுத்து அந்த குழந்தையின் உடலை வாங்க அக்குழந்தையின் தந்தை மறுத்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது