அரசியல் கட்சி தொடங்கும் முன் ஒரு அரசியல் படம்.. விஜய்யின் மாஸ் திட்டம்..!.

  • IndiaGlitz, [Tuesday,August 22 2023]

தளபதி விஜய் விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அரசியல் கட்சி தொடங்கும் முன்பே அவர் ஒரு மாஸ் அரசியல் படத்தில் நடிக்க இருப்பதாகவும் அது தான் ’தளபதி 68’ படம் என்றும் கூறப்படுகிறது.

சமீபத்தில் ’தளபதி 68’ படத்தின் அறிவிப்பு வெளியானது என்பதும் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் இந்த படம் உருவாக உள்ளது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் ஆரம்ப கட்டப் பணிகளை இயக்குனர் வெங்கட் பிரபு பார்த்து வருகிறார் என்பதும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதால் ஒரு வேடத்திற்கு ஜோதிகா ஜோடியாகவும் இன்னொரு வேடத்திற்கு பிரியங்கா மோகன் ஜோடியாகவும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இருவரும் விரைவில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படம் ஒரு அரசியல் திரில்லர் படம் என்றும் கூறப்படுகிறது. விஜய் விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன் ஒரு மாஸ் அரசியல் படத்தில் அவர் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற பின், அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்பதே விஜய்யின் மாஸ்டர் பிளான் என்றும் கூறப்படுகிறது.

 

More News

'ஆக்சன்' என்று சொல்லிவிட்டால் உடனே புயலாக மாறி விடுவார்: 'லியோ' விஜய் குறித்து வில்லன் நடிகர்..!

தளபதி விஜய் நடித்துள்ள 'லியோ' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பான தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. அக்டோபர் 19ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கும் நிலையில் அதற்கு

யோகி காலில் விழுந்தது ஏன்? சென்னை திரும்பிய ரஜினிகாந்த் விளக்கம்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு சென்ற போது அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  

ஒரு செம்ம ரோபோ காதல்.. ஹாட்ஸ்டாரில் விரைவில் ரிலீஸ்..!

தமிழ் திரை உலகில் 'சிவா மனசுல சக்தி' 'பாஸ் என்ற பாஸ்கரன்' 'ஒரு கல் ஒரு கண்ணாடி  உள்பட ஒரு சில வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் ராஜேஷ் எம் இயக்கத்தில் உருவாகி இருக்கும்  வெப் தொடர் 'MY3.

இயக்குனர் சீனுராமசாமியின் அடுத்த படம்.. டைட்டில், ஹீரோ அறிவிப்பு..!

தேசிய விருது பெற்ற இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தின் டைட்டில் போஸ்டர் மற்றும் இந்த படத்தின் ஹீரோ குறித்த அறிவிப்பு  வெளியாகியுள்ளது.

மீண்டும் நாயகியாக களமிறங்கும் சோனியா அகர்வால்.. டைட்டில் லுக் போஸ்டர் ரிலீஸ்..!

தமிழ் திரையுலகில் கடந்த 2000ஆம் ஆண்டுகளில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை சோனியா அகர்வால் தற்போது மீண்டும் அதிரடியாக நாயகியாக களமிறங்கியுள்ளார். அவர் முக்கிய வேடத்தில் நடிக்கும்