முதல்முறையாக விஜய் படத்தில் இந்த இரண்டும் இல்லை: ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

முதல் முறையாக விஜய் படத்தில் நாயகி மற்றும் பாடல்கள் இல்லாமல் உருவாக இருப்பதாக வெளிவந்த தகவல் அவரது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 65வது திரைப்படம் பீஸ்ட். இந்த படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் ’தளபதி 66’ படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இந்த நிலையில் தளபதி விஜய் நடிக்கும் 67வது திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த படம் குறித்த கூடுதல் தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன.

லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் ’தளபதி 67’ திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு ஆக்சன் படம் என்றும் இந்த படத்தில் நாயகி மற்றும் பாடல்கள் இரண்டுமே இல்லை என்றும் கூறப்படுகிறது. விஜய் படம் என்றாலே பாடல்களுக்கு முக்கியத்துவம் இருக்கும் என்பதும் அதேபோல் நாயகிகள் இல்லாத விஜய் படம் என்பதை அவரது ரசிகர்கள் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள் என்பதும் தெரிந்ததே.

ஆனால் இந்த இரண்டும் இல்லாமல் விஜய் திரைப்படம் ஒன்று வெளியாக இருப்பது பெரும் ஆச்சரியத்தை ரசிகர்களுக்கு ஏற்படுத்தி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’கைதி’ திரைப்படத்திலும் நாயகி மற்றும் பாடல்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

ரசிகரின் கேள்விக்கு தனது முடியை பதிலாக சொன்ன யாஷிகா!

பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையுமான யாஷிகா, ரசிகர் ஒருவரின் கேள்விக்கு தனது முடியால் பதில் சொல்லி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

16 நாடுகளை நட்புப் பட்டியலில் இருந்து விலக்கிய ரஷ்யா… இந்தியாவின் நிலைமை என்ன?

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா மேற்கொண்டிருக்கும் இராணுவ நடவடிக்கைக்கு

முடிவுக்கு வருமா உக்ரைன் போர்? பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?

11 நாட்களைக் கடந்து உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய ராணுவம் கடுமையான போரைத் தொடுத்து வருகிறது. இந்நிலையில் அந்நாட்டில்

விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' ரிலீஸ் தேதி இதுவா?

விக்ரம் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் 'துருவ நட்சத்திரம்' படத்தின் பணிகள் நீண்ட கால தாமதத்திற்குப் பின்னர் சமீபத்தில் மீண்டும் தொடங்கிய நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி

உக்ரைன் ராணுவத்தில் இணைந்த தமிழக மாணவர்… யார் இந்த சாய் நிகேஷ்?

போருக்கு மத்தியில் உக்ரைன் நாட்டில் படித்துவந்த கோவை மாணவர்