'பீஸ்ட்' பாணியை ஃபாலோ செய்கிறார்களா 'தளபதி 66' படக்குழுவினர்?

தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 66 படத்தின்’ படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் குழுவினர் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுவதில் ’பீஸ்ட்’ படத்தின் பாணியை ஃபாலோ செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த ’பீஸ்ட்’ திரைப்படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் கடந்த ஆண்டு விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு ஜூன் 21ஆம் தேதி வெளியானது. அதன் பிறகு ஜூன் 22ஆம் தேதி அதிகாலை 12 மணிக்கு செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது என்பதும் இந்த இரண்டு போஸ்டர்களும் மிகப்பெரிய அளவில் வைரலாகி சமூக வலைதளங்களை ஸ்தம்பிக்க வைத்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ’பீஸ்ட்’ படத்தின் பாணியிலேயே 'தளபதி 66’ படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஜூன் 21ஆம் தேதி மாலை 6 மணிக்கும், அதன்பிறகு செகண்ட் லுக் போஸ்டரை ஜூன் 22ஆம் தேதி அதிகாலை 12 மணிக்கும் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

வடிவேலுவின் 'நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தின் சூப்பர் அப்டேட்: ரிலீஸ் எப்போது?

வைகைப்புயல் வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தமிழ் சினிமாவில் ரீ எண்ட்ரி ஆகியுள்ள நிலையில் அவர் முக்கிய வேடத்தில் நடித்து வரும் திரைப்படமான 'நாய் சேகர் ரிட்டன்ஸ்'

போதைப்பொருள் விவகாரம்: பிரபல நடிகையின் சகோதரர் கைது!

போதைப்பொருள் பயன்படுத்தியதாக பிரபல நடிகையின் சகோதரர் பெங்களூர் போலீசாரால் கைது செய்யப்பட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

'குணா' குகை அளவுக்கு ஃபேமஸ் ஆனது 'வெற்றி' தியேட்டர்: ஏன் தெரியுமா?

உலகநாயகன் கமலஹாசன் நடித்த 'குணா' திரைப்படம் வெளியான பின்னர் தான் கொடைக்கானலில் அப்படி ஒரு குகை இருக்கிறது என்பது பலருக்குத் தெரிய வந்தது. அடர்த்தியான கொடைக்கானல்

சென்னை, திருப்பதி, கொச்சி: நயன் - விக்கியின் அடுத்த பயணம் ஹனிமூன் தான்!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவருக்க்கும் ஜூன் 9ஆம் தேதி சென்னையில் திருமணம் நடந்த நிலையில், திருமணம் முடிந்த மறுநாளே திருப்பதி

கமல்ஹாசனுக்கு இதுதான் முதல்முறை: 'விக்ரம்' செய்த சாதனை!

உலகநாயகன் கமலஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படம் ஜூன் மூன்றாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான நிலையில் இந்த படத்தின் முதல் காட்சி முடிந்ததுமே பாசிட்டிவ் விமர்சனங்கள்