விஜய்யின் 'தளபதி 66' ரிலீஸ் தேதி அறிவிப்பு: உற்சாகத்தில் ரசிகர்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 66’ படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் விஜய் ரசிகர்கள் உற்சாகமாகி உள்ளனர்.
தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் ’தளபதி 66’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய்யின் பிறந்த நாளன்று வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷாம் உள்ளிட்டோர் இணைந்து உள்ள தகவலை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தில் நடிகர் பிரபு இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியிட்டு புதிய போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில் ’தளபதி 66’ திரைப்படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ரசிகர்கள் உற்சாகமாகி உள்ளனர் .
ஏற்கனவே தளபதி விஜய் நடித்த, திருப்பாச்சி, நண்பன், போக்கிரி, மாஸ்டர் உட்பட பல திரைப்படங்கள் பொங்கல் தினத்தில் தான் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் ’தளபதி 66’ திரைப்படமும் அதேபோல் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Delighted to have #Prabhu sir onboard for #Thalapathy66.@actorvijay @directorvamshi @iamRashmika @MusicThaman @SVC_Official @Cinemainmygenes @KarthikPalanidp #TeamThalapathy66 pic.twitter.com/MAElJd8nRR
— Sri Venkateswara Creations (@SVC_official) May 8, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com