இதுதான் விஜய் பட டைட்டிலா? சமூக வலைத்தளத்தில் பரவும் விஜய்யின் புதிய படத்தின் பெயர்!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கிவரும் திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது என்பது தெரிந்ததே. லாக்டவுன் முடிந்து படப்பிடிப்பு தொடங்க அனுமதி கிடைத்தவுடன் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் விஜய்யின் பிறந்த நாள் இம்மாதம் 22ஆம் தேதி கொண்டாட இருப்பதை அடுத்து அன்றைய தினம் விஜய் நடித்துவரும் 65வது படத்தின் டைட்டில் அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் திடீரென விஜய்யின் 65 வது படத்தின் டைட்டில் ’டார்கெட்’ என்று வைரலாகி வருகிறது. இது குறித்த ரசிகர்களால் உருவாக்கப்பட்ட போஸ்டரும் வைரலாகி வருவதால் பலரும் இந்த டைட்டில் தான் விஜய்யின் அடுத்த பட டைட்டில் என்று பகிர்ந்து வருகின்றனர். ஆனால் இன்னும் படக்குழுவினர் டைட்டிலை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வரும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

கட்டிப்பிடிக்கும் தொழிலில் பெண்கள்? ஒருமணி நேரத்திற்கு ரூ.7,000 வசூலிக்கும் ஆச்சர்யம்!

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மருத்துவ முத்தம் என்றால் என்ன என்பதை நாம் தெரிந்து கொண்டோம்.

பூஞ்சை நோய் பரவுவது எப்படி? வதந்திகளுக்கு எளிமையான விளக்கம்!

கொரோனா பாதிப்பை அடுத்து பல இணைநோய்களும் மனிதர்களைத் தாக்கி வருகின்றன.

மதுரை மதுப்பிரியர்கள் சாதனை....! கோடிகளில் குவியும் டாஸ்மாக் கல்லா...!

தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக, மது விற்பனை துவங்கியதையடுத்து, மதுரையில் அதிகளவில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

சஞ்சீவ்க்கும் எனக்கும் இருக்கும் உறவுமுறை: வனிதா அறிவிப்பை கேட்டு அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்!

நடிகையும் பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான வனிதா குறித்த சர்ச்சை கருத்துக்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கும் என்பதும், அதற்கு அவர் தனது சமூக வலைத்தளத்தில் விளக்கமளித்து

யூடியூபர் மதன் சார்பில், முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல்...!

ஆன்லைன் மூலமாக மட்டும் யூடியூபர் மதன் மீது 150-க்கும் அதிகமான புகார்கள் வந்துள்ளதாக, மத்திய குற்றபிரிவு சைபர் கிரைம் மூலமாக வந்த செய்திகள் கூறுகின்றது.