திடீரென தெலுங்கில் டிரெண்ட் ஆகும் விஜய்யின் ஹேஷ்டேக்: என்ன காரணம்?

  • IndiaGlitz, [Wednesday,January 26 2022]

தளபதி விஜய் குறித்த ஹேஷ்டேக்குகள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆவது சர்வசாதாரண ஒன்று என்பதும் வாரத்திற்கு இரண்டு முறையாவது விஜய்யின் ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகும் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் திடீரென தெலுங்கிலும் விஜய் ஹேஷ்டேக் தற்போது டிரெண்டாகியுள்ளது.

தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான ’நண்பன்’ திரைப்படம் முதல் முதலாக தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸானது என்பதும் இந்த படம் தெலுங்கிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்னர் விஜய்யின் பல திரைப்படங்கள் தமிழில் வெளியாகும் போது தெலுங்கிலும் வெளியானது.

இந்த நிலையில் தற்போது நேரடியாகவே விஜய் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என்பதும் அது தான் அவர் நடிக்கயிருக்கும் 66வது திரைப்படம் என்பதும் இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கவுள்ளார் என்பதும், தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கவுள்ளார் என்பதும் அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் ’நண்பன்’ திரைப்படம் தெலுங்கில் வெளியாகி 10 ஆண்டுகள் ஆனதை அடுத்து ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் உள்ள விஜய் ரசிகர்கள் விஜய்யின் 10 ஆண்டுகள் என்ற ஹேஷ்டேக்கை டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தெலுங்கில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

More News

சிம்புவின் அடுத்த பட வியாபாரம் முடிந்தது: ரிலீஸ் எப்போது?

சிம்பு நடித்துவரும் 'வெந்து தணிந்தது காடு' என்ற படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது என்றும் அதே போல் அவர் நடித்து வரும் இன்னொரு படமான 'பத்து தல'  படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது 

சிம்பு பிறந்தநாளில் ரசிகர்களுக்கு டபுள் விருந்து?

பிப்ரவரி 3ஆம் தேதி நடிகர் சிம்பு தனது பிறந்தநாளை கொண்டாட இருக்கும் நிலையில் அவரது பிறந்த நாளின் போது ரசிகர்களுக்கு டபுள் விருந்து காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய்சேதுபதியின் அடுத்த படமும் ஓடிடி ரிலீஸா?

நடிகர் விஜய் சேதுபதி நடித்த  மூன்று திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆன நிலையில் தற்போது அவருடைய அடுத்தப் படமும் ஓடிடியில் ரிலீஸாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரம்யா பாண்டியனின் அம்மன் போட்டோஷூட்: இதிலும் கவர்ச்சியா?

 நடிகைகள் கே ஆர் விஜயா முதல் ரம்யாகிருஷ்ணன் வரை பல நடிகைகள் அம்மன் கேரக்டரில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த நிலையில் தற்போது ரம்யா பாண்டியனும் அம்மன் வேஷத்தில் போட்டோஷூட் எடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் டோட்டலாக மாறிய பாவனி: வைரல் வீடியோ

சமீபத்தில் முடிவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ராஜூ எதிர்பார்த்தபடியே டைட்டில் வின்னர் பட்டத்தை வென்றார் என்பதும், அதேபோல் எதிர்பார்த்தபடி பிரியங்கா இரண்டாவது இடத்தை பிடித்தார் என்பது தெரிந்ததே.