close
Choose your channels

விஜய்க்கு சூப்பர்ஹிட் கொடுத்த இயக்குனர் மகனின் முதல் படம்: படப்பிடிப்பு ஆரம்பம்

Monday, October 17, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய்க்கு சூப்பர் ஹிட் கொடுத்த இயக்குநரின் மகன் சினிமாவில் அறிமுகமாகி இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது.

இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த ’பூவே உனக்காக’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் விஜய்யின் சூப்பர் ஹிட் வெற்றி படங்களில் ஒன்று என்பதும் தெரிந்தது. அது மட்டுமின்றி புது வசந்தம், சூரியவம்சம், வானத்தைப்போல உள்பட பல சூப்பர் ஹிட் படங்களை விக்ரமன் இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா அறிமுகமாகும் படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது. இந்த படத்தை கேஸ் ரவிக்குமாரிடம் உதவியாளர்களாக இருந்த சூரிய கதிர் மற்றும் கார்த்திகேயன் ஆகிய இருவரும் இணைந்து இயக்குகின்றனர்.

இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் சரத்குமார் நடித்து உள்ளார் என்பதும் மற்றும் சில கேரக்டர்களில் கேஎஸ் ரவிக்குமார், சித்தாரா, முனிஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ராம்சரன் ஒளிப்பதிவில் ஜான் படத்தொகுப்பில் அருண் கலை இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று விஜய் கனிஷ்காவின் பிறந்த நாளின்போது தொடங்கியது.

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது ஒரு குடும்ப சென்டிமென்ட் காமெடி கலந்த ஆக்ஷன் படம் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment