விஜய்க்கு சூப்பர்ஹிட் கொடுத்த இயக்குனர் மகனின் முதல் படம்: படப்பிடிப்பு ஆரம்பம்

  • IndiaGlitz, [Monday,October 17 2022]

தளபதி விஜய்க்கு சூப்பர் ஹிட் கொடுத்த இயக்குநரின் மகன் சினிமாவில் அறிமுகமாகி இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது.

இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த ’பூவே உனக்காக’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் விஜய்யின் சூப்பர் ஹிட் வெற்றி படங்களில் ஒன்று என்பதும் தெரிந்தது. அது மட்டுமின்றி புது வசந்தம், சூரியவம்சம், வானத்தைப்போல உள்பட பல சூப்பர் ஹிட் படங்களை விக்ரமன் இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா அறிமுகமாகும் படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது. இந்த படத்தை கேஸ் ரவிக்குமாரிடம் உதவியாளர்களாக இருந்த சூரிய கதிர் மற்றும் கார்த்திகேயன் ஆகிய இருவரும் இணைந்து இயக்குகின்றனர்.

இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் சரத்குமார் நடித்து உள்ளார் என்பதும் மற்றும் சில கேரக்டர்களில் கேஎஸ் ரவிக்குமார், சித்தாரா, முனிஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ராம்சரன் ஒளிப்பதிவில் ஜான் படத்தொகுப்பில் அருண் கலை இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று விஜய் கனிஷ்காவின் பிறந்த நாளின்போது தொடங்கியது.

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது ஒரு குடும்ப சென்டிமென்ட் காமெடி கலந்த ஆக்ஷன் படம் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

More News

சன்னிலியோனுக்கே டஃப் கொடுக்கும் யாஷிகா.. செம கிளாமர் புகைப்படங்கள்!

இந்திய திரையுலகில் அதிகபட்ச கவர்ச்சி காட்டி நடிக்கும் நடிகை என்றால் அது சன்னிலியோன் என்றுதான் கூறப்படுகிறது. ஆனால் சன்னிலியோனுக்கே டஃப் கொடுக்கும்  அளவுக்கு நடிகையும் பிக்பாஸ்

கணவருக்கு அன்பு முத்தம் கொடுத்துவிட்டு பிக்பாஸ் செல்லும் நடிகை: ரொமான்ஸ் புகைப்படங்கள்!

கணவருக்கு அன்பு முத்தம் கொடுத்துவிட்டு நடிகை மைனா நந்தினி பிக்பாஸ் வீட்டுக்கு செல்லும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன. 

'பொன்னியின் செல்வன்' வானதியா இவர்? வேற லெவல் ஹாட் புகைப்படங்கள்!

சமீபத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் தற்போது 500 கோடி ரூபாய் வசூலை நெருங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. 

'தளபதி 67' படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜின் ஹீரோ இவர் தான்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தளபதி விஜய் நடிக்க இருக்கும் 'தளபதி 67' படத்தை இயக்க இருக்கும் நிலையில் அதற்கு அடுத்த படத்தில் நடிக்கும் ஹீரோ குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

ஒன்மேன் ஷோவாக பிக்பாஸ்: கமல்ஹாசனே ரசிக்கும் அளவுக்கு ஜிபி முத்துவின் காமெடி!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஐந்து சீசன்களும்  சீரியசாகவே சென்று கொண்டிருந்த நிலையில் இந்த சீசன் மட்டுமே கலகலப்பாகவும் காமெடியாகவும் உள்ளது என்பதும் அதற்கு முழு காரணம்