'சர்கார்' படத்தின் மெயின் வில்லன் குறித்த தகவல்

  • IndiaGlitz, [Monday,July 23 2018]

தளபதி விஜய் நடித்து வரும் 'சர்கார்' படத்தின் படப்பிடிப்புகள் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்ட நிலையில் இன்று முதல் விஜய் தனது டப்பிங் பணியை தொடங்கவுள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். டப்பிங் பணிகள் முடிந்த பின்னர் 'சர்கார்' படக்குழு அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக அமெரிக்கா செல்லவுள்ளது.

இந்த நிலையில் 'சர்கார்' படத்தின் வில்லனாகவும், அரசியல்வாதியாகவும் பழ.கருப்பையா மற்றும் ராதாரவி நடித்து வருவது தெரிந்ததே. இருப்பினும் இந்த படத்தின் மெயின் வில்லன் இவர்கள் இருவரும் இல்லை என்றும், இன்னொரு பிரபல நடிகர் தான் இந்த படத்தில் விஜய்க்கு மெயின் வில்லன் என்றும் செய்திகள் வெளிவந்தது. இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் செய்தியின்படி இந்த படத்தின் மெயின் வில்லன் வியட்நாம் நடிகரான ஜானி என்று கூறப்படுகிறது இவர் ஏற்கனவே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய '7ஆம் அறிவு' திரைப்படத்தில் வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு வலிமையான வில்லன் ஒரு படத்தில் இருந்தால் மட்டுமே ஹீரோவின் சாகசங்கள் எடுபடும் என்பதற்கேற்ப இந்த தகவல் உறுதி செய்யப்படும் பட்சத்தில் 'சர்கார்' படம் விஜய்க்கு ஒரு சவாலான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

More News

கமல், ரஜினி அரசியலை மறைமுகமாக தாக்கும் திருமாவளவன்

கோலிவுட் திரையுலகில் இருந்து ஒரே நேரத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய இருவரும் தமிழக அரசியலில் குதித்துள்ளனர். கமல்ஹாசன் அரசியல் கட்சியை தொடங்கி களத்தில் இறங்கிவிட்டார்.

பிக்பாஸ் வீட்டை விட்டு இன்று வெளியேறும் நபர் இவர்தான்!

பிக்பாஸ் வீட்டில் இருந்து வாரம் ஒருவர் வெளியேறி வருகின்றனர். இதுவரை மமதி, அனந்து, நித்யா ஆகியோர் வெளியேறி இருக்கும் நிலையில் இன்று வெளியேறும் நபர் யாராக இருக்கும்

பாலிவுட் செல்லும் மற்றொரு முன்னணி தமிழ் நடிகை

பாலிவுட் திரையுலகில் இருந்து பல நடிகைகள் கோலிவுட் பக்கம் படையெடுத்து வந்து கொண்டிருக்கும் நிலையில் கோலிவுட்டின் பிரபல நடிகை ஒருவர் பாலிவுட் பட வாய்ப்பை பெற்றுள்ளார். அவர்தான் அமலாபால்

பார்த்திபன் இயக்கத்தில் மீண்டும் வெற்றி ஜோடி

பார்த்திபன் இயக்கிய 'கோடிட்ட இடங்களை நிரப்புக' திரைப்படம் கடந்த 2016ஆம் ஆண்டு வெளிவந்த நிலையில் அவர் விரைவில் 'உள்ளே வெளியே 2' திரைப்படம் இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

'பெரியார் குத்து'க்காக நடனம் ஆடிய சிம்பு

சிம்பு சிறந்த நடிகர் மட்டுமின்றி நல்ல பாடகர் மற்றும் இசையமைப்பாளர் என்பது அனைவரும் அறிந்ததே. திரைப்படங்களுக்கு இசையமைப்பது மட்டுமின்றி அவ்வப்போது தனிப்பாடல்களையும் வெளியிட்டு வருவது வழக்கம்.